AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026ல் எந்த 4 அணிகள் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும்? பட்டியலில் சிஎஸ்கே உள்ளதா?

IPL 2026 Playoffs: ஐபிஎல் 2026-ல் பங்கேற்கும் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.

IPL 2026: ஐபிஎல் 2026ல் எந்த 4 அணிகள் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும்? பட்டியலில் சிஎஸ்கே உள்ளதா?
கணிக்கப்பட்ட பிளே ஆஃப் செல்லும் அணிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Mar 2026 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) 19வது சீசன் வருகின்ற 2026 மார்ச் 28 ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்த சீசனில் எந்தெந்த அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் என்பதையும், எந்த 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறும் என்பதையும் அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஐபிஎல் 2026-ல் பங்கேற்கும் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகியவை அடங்கும். இந்தப் போட்டியாளர்களில், எந்த நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றில் இடத்தைப் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் 2026ல் அதிக வயதுடைய வீரர்கள்.. பட்டியலில் ரோஹித், கோலி!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வழிகாட்டுதலின்கீழ் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான அணியாக உள்ளது. எனவே, இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் தனது இடத்தை உறுதி செய்யும். கடந்த 2025 சீசனில் மிடில் ஆர்டரில் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பேட்டிங் ஆர்டரில் சிறப்பான வீரர்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தொடக்கம் முதல் 7 வது வரிசை வரை பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும். இதுமட்டுமின்றி, வலுவான சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுவாகக் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் நிறைந்துள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுவாகக் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் நிறைந்துள்ளனர். இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனை போலவே, 2026 ஐபிஎல் சீசனிலும் பிளேஆஃப் சுற்றில் ஒரு இடத்தைப் பிடிக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையின் கீழ் தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மீண்டும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். வழக்கம்போல் ரன் மெஷினாக விராட் கோலி செயல்பட்டால், ஆர்சிபி அணி மீண்டும் கோப்பையை வெல்வது உறுதி.

ALSO READ: 10வது ஓவருக்கு பிறகு பந்து மாற்றம்.. ஐபிஎல்லில் வரும் புதிய விதி.. யாருக்கு சாதகம்?

பஞ்சாப் கிங்ஸ்:

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணி, மீண்டும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறையில் சம பலத்துடன் உள்ளதால், பஞ்சாப் அணி ஐபிஎல் 2026 சீசனிலும் நிச்சயம் ஆதிக்கத்தை செலுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது.

Follow Us