AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 15க்கும் அதிகமான வீரர்கள் காயம்.. பரிதாப நிலையில் ஐபிஎல் 19வது சீசன்!

Unavailable players for IPL 2026: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா தொடரின் ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாட மாட்டார். சமீபத்தில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் போது தொடைத்தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்ட பத்திரனா, 2026 ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: 15க்கும் அதிகமான வீரர்கள் காயம்.. பரிதாப நிலையில் ஐபிஎல் 19வது சீசன்!
ஐபிஎல் 2026ல் பங்கேற்காத வீரர்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Mar 2026 17:37 PM IST

ஐபிஎல் (IPL 2026) தொடங்குவதற்கு இன்னும்  6 நாட்களுக்கு குறைவான நேரமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஏற்கனவே ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. 19வது சீசன் தொடங்குவதற்கு முன்பே பல வீரர்கள் காயம் (Injury) காரணமாக விலகியுள்ளனர். இது அணிகளின் சமன்பாட்டைச் சீர்குலைத்துள்ளது. தற்போது, ​​இந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களைக் கண்டறிய பல அணிகளும் போராடி வருகிறது. இதற்கிடையில், அடுத்த சில நாட்களில் மேலும் மருத்துவ ரீதியான தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், ஐபிஎல் 2026 சீசனில் தொடர்வார்களா அல்லது விலகுவார்களா என்பது தெரியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்தக் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்தத் தொடர் முழுவதும் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பு அவரால் முழுமையாகக் குணமடைய முடியவில்லை. இது தவிர, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவும் முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருவதால், அவராலும் விளையாட முடியாது.

ALSO READ: அறிமுகமான முதல் பந்திலேயே சிக்ஸர்.. ஐபிஎல்லில் படைக்கப்பட்ட அரிய சாதனை..!

மறுபுறம், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா தொடரின் ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாட மாட்டார். சமீபத்தில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் போது தொடைத்தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்ட பத்திரனா, 2026 ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2026 சீசனில் காயம் மற்றும் பிற காரணங்களால் சந்தேகத்தில் உள்ள வீரர்கள் பட்டியல்:

  • ஹர்ஷித் ராணா (KKR): முழங்கால் காயம் காரணமாக ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் அணியில் இருந்து விலகியுள்ளார்.
  • ஆகாஷ் தீப் (KKR): கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்தக் காயம் காரணமாக, கொல்கத்தா அணிக்காக விளையாடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
  • மதிஷா பத்திரனா (KKR): இடுப்பு தசைப்பிடிப்பு காரணமாக, தொடக்க ஆட்டத்திற்கான அணியில் இருந்து விலகியுள்ளார்.
  • நாதன் எல்லிஸ் (CSK): தொடைத்தசைப் பிடிப்பு காயம் காரணமாக, இந்த முழு ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
  • மேத்யூ ஷார்ட் (CSK): கட்டைவிரலில் காயம், தொடக்கத்தில் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
  • சாம் கர்ரன் (RR): தொடை காயம் காரணமாக, இந்த முழு ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
  • ஆடம் மில்னே (RR): தொடைத்தசைப் பிடிப்பு காயம் காரணமாக, ஐபிஎல் 2026 சீசன் முழுவதுலிருந்தும் விலகியுள்ளார்.
  • பேட் கம்மின்ஸ் (SRH): முதுகு காயம் காரணமாக, தொடக்கத்தில் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
  • ஜாக் எட்வர்ட்ஸ் (SRH): கால் காயம் காரணமாக முழு ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
  • இஷான் மலிங்கா (SRH): தோள்பட்டையில் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் ஐபிஎல் 2026ல் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.
  • ஜோஷ் ஹேசில்வுட் (RCB): தொடைத்தசை/கணுக்கால் காயம் காரணமாக, தொடக்கத்தில் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
  • அதர்வா அங்கோலேகர் (MI): முழங்கால் காயம் காரணமாக, முழு ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
  • லாக்கி பெர்குசன் (PBKS): மகன் பிறந்திருப்பதால் தொடக்க ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.
  • வனிந்து ஹசரங்கா (LSG): தொடைத்தசைப் பிடிப்பு காரணமாக தொடக்க ஆட்டத்தில் இருந்து விலகினார்.
  • மயங்க் யாதவ் (LSG): தசைப்பிடிப்பு காரணமாக தொடக்க ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் பர்ப்பிள் கேப்.. ஆதிக்கம் செலுத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

  • மொஹ்சின் கான் (LSG): முழங்கால் பிரச்சனை, நிலைமை தெளிவாகத் தெரியவில்லை.
  • ஜோஷ் இங்லிஸ் (LSG): தனிப்பட்ட விடுப்பு, தொடக்க ஆட்டத்தில் விளையாட மாட்டார்.
  • மிட்செல் ஸ்டார்க் (DC): பணி அழுத்தம் காரணமாக தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை.

Follow Us