IPL 2026: ஒரே ஒரு தோல்வி.. பஞ்சாப் பிளே ஆஃப் பயணம் க்ளோஸ்.. ஆர்சிபிக்கு எதிராக மோதல்!
PBKS vs RCB: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால், பிளே ஆஃப் தங்களது இடத்தை உறுதி செய்வார்கள். ஆனால், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) தோற்றால், பிளே ஆஃப் பயணம் முடிவுக்கு வரக்கூடும். இந்தநிலையில், தர்மசாலா பிட்ச் எப்படி இருக்கும், ஹெட் டூ ஹெட் விவரம் போன்றவற்றை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் 2026-ன் (IPL 2026) 61-வது போட்டியானது பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே தர்மசாலாவில் இன்று அதாவது 2026 மே 17ம் தேதி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. ஐபிஎல்-ன் 19-வது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் எது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால், பிளே ஆஃப் தங்களது இடத்தை உறுதி செய்வார்கள். ஆனால், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) தோற்றால், பிளே ஆஃப் பயணம் முடிவுக்கு வரக்கூடும். இந்தநிலையில், தர்மசாலா பிட்ச் எப்படி இருக்கும், ஹெட் டூ ஹெட் விவரம் போன்றவற்றை இங்கு தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கடைசி போட்டியில் கால் வைக்கும் எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் ஓய்வு..?
தர்மசாலா பிட்ச் அறிக்கை:
தரம்சாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க (HPCA) மைதானத்தின் பிட்ச் பொதுவாக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் மற்றும் பவுன்ஸ் கிடைப்பதால், பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்தில் சிரமத்தை ஏற்படுத்த முடிகிறது. இருப்பினும், பேட்ஸ்மேன்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் ஆடினால், நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மைதானத்தில் 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடித்தது.




PBKS மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனை
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 37 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ALSO READ: இன்னும் 11 போட்டிகள் மட்டுமே.. பிளே ஆஃப் செல்ல எந்த அணிகளுக்கு வாய்ப்பு?
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் தார், ரிச்சர்ட் க்ளீசன், ஜோஷ் ஹேசில்வுட்.
இம்பாக்ட் வீரர்: தேவ்தத் படிக்கல்
பஞ்சாப் கிங்ஸ்
பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கூப்பர் கோனாலி, விஷ்ணு வினோத் (விக்கெட் கீப்பர்), சூர்யன்ஷ் ஷெட்ஜ், அஸ்மத்துல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், விஜய்குமார் வைஷாக்
இம்பாக்ட் வீரர்: பிரப்சிம்ரன் சிங்