டிஜிட்டல் உலகத்தின் தேவை.. இந்தியாவில் செமி கண்டக்டர் ஆலை.. நெதர்லாந்தில் பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம்
Semiconductor Plant : பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் கனிமங்கள் மட்டுமின்றி, புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. இந்தப் பயணத்தின் போது செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது.
செமி கண்டக்டர் என்பது மின்சாரத்தை தேவையான அளவுக்கு கட்டுப்படுத்தும். இவற்றை சிப் வடிவில் செல்போன் முதல் கார் வரை பயன்படுத்துகின்றனர். இன்றைய AI, 5G, மின்சார கார்கள், செல்போன்கள், லேப்டார் போன்ற டிஜிட்டல் உலகத்துக்கு செமிகண்டக்டர் சிப்புகள் மிகவும் அவசியம். அதனால் இந்தியாவும் செமிகண்டக்டர் உற்பத்தியில் முதலீடு செய்து வருகிறது. செமி கண்டக்டர் ஒப்பந்தத்தின் கீழ், டச்சு நிறுவனமான ஏ.எஸ்.பி.எல் (ASPL) மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை தங்களது ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ளும்.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட முடிவுகள் உறுதியானவை மற்றும் முக்கியமானவை என்று விவரித்த பிரதமர் மோடி, அவை வரும் நாட்களில் இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். மேலும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொருளாதார ஒத்துழைப்பு, இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நட்புறவின் ஒரு முக்கியத் தூணாகும். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நிதித் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், குறைக்கடத்திகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்
பிரதமர் பதிவு
Economische samenwerking is een belangrijke pijler van de vriendschap tussen India en Nederland. De vrijhandelsovereenkomst tussen India en de EU biedt oneindige mogelijkheden. Er is enorm veel ruimte voor samenwerking op het gebied van fintech, kritieke mineralen, halfgeleiders,… pic.twitter.com/IQxBFrdClL
— Narendra Modi (@narendramodi) May 16, 2026
செமி கண்டக்டர் உற்பத்தி
இந்தியாவில் குறைக்கடத்தி எனப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கு ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டச்சு குறைக்கடத்தி உபகரண உற்பத்தியாளரான ஏ.எஸ்.எம்.எல் (ASML) நிறுவனத்திற்கும், மின்னணு உற்பத்தி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டச்சு பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிநவீன சிறிய செமி கண்டக்டர் சிப்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் லித்தோகிராபி இயந்திரங்களின் முன்னணி உற்பத்தியாளராக ஏ.எஸ்.எம்.எல் நிறுவனம் விளங்குகிறது. குஜராத்தின் தோலேராவில் நிறுவப்படவுள்ள இந்தியாவின் முதல் முன்னணி குறைக்கடத்தி உற்பத்தி ஆலைக்காக, டாடா மற்றும் ஏ.எஸ்.எம்.எல் இடையேயான இந்த கூட்டாண்மையை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இந்தியாவின் முதல் குறைக்கடத்தி வேஃபர் உற்பத்தி ஆலை
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ₹91,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் வேஃபர் உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், தோலேரா ஆலையில் உள்ள ASML நிறுவனத்தின் மேம்பட்ட லித்தோகிராபி இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் என்றும், இது இந்தியாவின் முதல் வர்த்தக ரீதியான 300மிமீ செமி கண்டக்டர் ஆலையின் தடையற்ற செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மை, உள்ளூர் திறமையாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது, லித்தோகிராஃபி தொடர்பான திறன்களை வளர்ப்பது மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும். சிப் உற்பத்தியில் லித்தோகிராஃபி வகிக்கும் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, இந்த ஃபேப்பின் வெற்றிகரமான செயல்பாட்டிற்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பை இரு நிறுவனங்களும் உருவாக்கும்.
இந்தியாவின் செமி கண்டக்டர் துறை பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய ASML-இன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கிறிஸ்டோஃப் ஃபூக்ஸ், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் குறைக்கடத்தித் துறை மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், இத்துறையில் நீண்டகால கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது ஒரு முக்கியமான மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.