AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2025 Qualifier 1: இறுதிப்போட்டியில் களம் காணும் அணி எது..? குவாலிபையர் 1ல் மோதும் RCB vs PBKS..!

Punjab Kings vs Royal Challengers Bengaluru: ஐபிஎல் 2025 இல், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அசத்தலாகப் செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மே 29 அன்று, மொஹாலி முல்லன்பூர் ஸ்டேடியத்தில் ஆர்சிபிக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாட உள்ளனர். இந்தப் போட்டியின் முக்கியத்துவம், இரு அணிகளின் ஹெட்-டு-ஹெட், முல்லன்பூர் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட் ஆகியவை இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

IPL 2025 Qualifier 1: இறுதிப்போட்டியில் களம் காணும் அணி எது..? குவாலிபையர் 1ல் மோதும் RCB vs PBKS..!
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 29 May 2025 17:44 PM IST

ஐபிஎல் 2025 சீசனில் (IPL 2025) ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி (Punjab Kings) யாரும் எதிர்பார்க்காதவகையில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், கடந்த 2014ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்குள் முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணியை போலவே, ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது. 2025 மே 29ம் தேதியான இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையே மொஹாலியில் உள்ள முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் குவாலிஃபையர்-1 போட்டி நடைபெறுகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், முல்லன்பூர் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

முல்லன்பூர் கிரிக்கெட் ஸ்டேடியம்:

முல்லன்பூர் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 2024ம் ஆண்டே கட்டப்பட்டு, இந்த முறை முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸின் சொந்த ஸ்டேடியமாக மாற்றப்பட்டது. மறுசீரமைப்பிற்கு முன்னதாக, இந்த ஸ்டேடியத்தின் பெயர் மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகும். தற்போது இது புதிய பிசிஏ (பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்) மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இது முல்லன்பூரில் இருப்பதால், இது முல்லன்பூர் கிரிக்கெட் மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

முல்லன்பூர் ஸ்டேடியத்தின் சராசரி ஸ்கோர் 170. இந்த சீசனில் இந்த மைதானத்தில் 4 போட்டிகள் நடந்துள்ளன, அவற்றில் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 8 இன்னிங்ஸ்களில், 3 முறை மட்டுமே 200 க்கும் அதிகமான ரன்கள் பதிவாகியுள்ளது. அதன்படி, இங்கு ரன்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை எதிர்கொள்வார்கள்.

கடந்த 2024 முதல் இதுவரை இந்த முல்லன்பூர் ஸ்டேடியத்தில் மொத்தம் 9 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற கேப்டனின் அணி 5 முறையும், டாஸ் இழந்த அணி 4 முறையும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே இதுவரை 35 போட்டிகள் நடந்துள்ளன. இதில், அதிகபட்சமாக பஞ்சாப் அணி 18 முறையும், பெங்களூரு அணி 17 முறையும் வென்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 241 ரன்கள் ஆகும். அதேநேரத்தில்,  பெங்களூருக்கு எதிராக பஞ்சாபின் அதிகபட்ச ஸ்கோர் 232 ரன்கள் ஆகும்.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதேநேரத்தில், இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபையர் 2வில் மோதும்.

பஞ்சாப் கிங்ஸின் முழு அணி விவரம்:

ஹர்னூர் சிங், நேஹால் வதேரா, பிரியான்ஷ் ஆர்யா, பீலா அவினாஷ், ஷஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஓவன், முஷிர் கான், சூர்யாஷ் ஷெஜ், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), விஷ்ணு வினோத் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் ப்ரார், குல்தீப் சென், கைல் ஜேமிசன், பிரவீன் துபே, வைஷாக் விஜய் குமார், சேவியர் பார்ட்லெட், யாஷ் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் முழு அணி விவரம்:

மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஸ்வஸ்திக் சிகாரா, டிம் டேவிட் , விராட் கோலி , க்ருனால் பாண்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், மனோஜ் பந்தேஜ், மோஹித் ரதி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), டிமிமண்டா சிங் (விக்கெட் கீப்பர்), புவனேஷ்வர் குமார், பிளஸ்ஸிங் முசரபானி, ஜோஷ் ஹேசில்வுட், நுவான் துஷாரா, ரசிக் சலாம், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.

Follow Us