Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Eliminator: எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை – குஜராத் இன்று பலப்பரீட்சை!

Gujarat Titans vs Mumbai Indians: ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. முல்லன்பூர் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது. ஹெட்-டு-ஹெட் சந்திப்புகளில் குஜராத் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளின் ப்ளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் மற்றும் போட்டி முன்னோட்டம் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

IPL 2025 Eliminator: எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை – குஜராத் இன்று பலப்பரீட்சை!
சுப்மன் கில் - ஹர்திக் பாண்ட்யாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2025 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் (Indian Premier League) எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் (Mumbai Indians) இன்று அதாவது 2025 மே 30ம் தேதி மோதுகிறது. இந்த போட்டியானது நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூரின் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியானது இரு அணிகளும் வாழ்வா, சாவா போட்டியாகும். எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி ஐபிஎல் 2025 சீசனில் இருந்து வெளியேறும். அதேநேரத்தில் வெற்றிபெறும் அணி 2வது தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும். இந்தநிலையில் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன், முல்லன்பூர் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

முல்லன்பூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக கருதப்படுகிறது. இருப்பினும், குவாலிபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் அணி இங்கு 101 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இங்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை விட அதிக உதவியைப் பெறலாம்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி அதிகபட்சமாக 5 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ்:

சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷர்பான் ரூதர்ஃபோர்ட், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் தீர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராபின் மின்ஸ்/சத்தியநாராயண ராஜு, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், விக்னேஷ் புதூர்