Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jyothi Yarraji Wins Gold: 100 மீட்டர் தடை ஓட்டம்.. தடையை உடைத்து தங்கத்தை தூக்கிய ஜோதி யாராஜி!

Asian Athletics Championship 2025: ஜோதி யாராஜி 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 12.96 வினாடிகளில் இலக்கை அடைந்து, சாம்பியன்ஷிப் சாதனையையும் முறியடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 5வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். இவர் இதற்கு முன்னர் 2023ல் தங்கம் வென்றதால், இந்த சாதனையை தொடர்ச்சியாக பதிவு செய்த 5வது வீராங்கனையாகவும் அவர் மாறினார்.

Jyothi Yarraji Wins Gold: 100 மீட்டர் தடை ஓட்டம்.. தடையை உடைத்து தங்கத்தை தூக்கிய ஜோதி யாராஜி!
ஜோதி யாராஜிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 May 2025 22:08 PM

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் (Asian Athletics Championships) 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்திய பெண் தடகள வீராங்கனை ஜோதி யாராஜி (Jyothi Yarraji) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் ஜோதி யாராஜி வெறும் 12.96 வினாடிகளில் இலக்கு தூரத்தை அடைந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை (Gold Metal) தட்டு சென்றார். இதன்மூலம், தென் கொரியாவின் குமியில் நடந்து வரும் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் இதுவரை 5 தங்க பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அசத்திய ஜோதி யாராஜி:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோதி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஜோதி யாராஜி தங்க பதக்கத்தை வென்றிருந்தார். இதன்மூலம், தங்க பதக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துகொண்ட 5வது தடகள வீராங்கனை என்ற சாதனையை ஜோதி யாராஜி படைத்தார். இவருக்கு முன்பாக, ஜப்பானின் எமி அகிமோட்டோ (1979, 1981, 1983) மற்றும் மூன்று சீன வீரர்கள் ஜாங் யூ (1991, 1993), சு யின்பிங் (2003, 2005) மற்றும் சன் யாவே (2009, 2011) ஆகியோர் செய்திருந்தனர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 100 மீட்டர் தடை பந்தயத்தில் இந்திய வீராங்கனைகளின் சாதனைகள்:

2000 – அனுராதா பைஸ்வால் – வெண்கலம்
2013 – ஜெயபால் ஹேமாஸ்ரீ – வெண்கலம்
2023 – ஜோதி யாராஜி – தங்கம்
2025 – ஜோதி யாராஜி – தங்கம்

ரிலே பிரிவிலும் இந்தியா தங்கம்:

2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் ரிலே அணியும் அற்புதமாக செயல்பட்டு, 4*400 மீட்டர் போட்டியில் தங்க பதக்கம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 5வது தங்கப் பதக்கமாகும். இந்திய ரிலே அணியில் ஜிஷ்னா மேத்யூ, ரூபால், ரஜிதா குஞ்சா, சுபா வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய ரிலே அணி மொத்தம் 3:34:18 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது. அதேநேரத்தில், வியட்நாம் அணி 3:34:77 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியையும், இலங்கை அணி 3:36:67 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலத்தையும் வென்றது. இதற்கிடையில், இது ரிலே பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்க பதக்கம் ஆகும். நேற்று அதாவது 2025 மே 28ம் தேதி இந்தியா கலப்பு ரிலே பிரிவில் தங்க பதக்கத்தை வென்றது. இந்த குழுவிலும் ரூபாலும், சுபாவும் இடம்பெற்றிருந்தனர்.

2025 மே 29ம் தேதியான இன்று நடைபெற்ற பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அன்சி சோஜன் வெள்ளிப் பதக்கத்தையும், ஷைலி சிங் வெண்கல பதக்கதையும் வென்றனர். இந்த போட்டியில் ஈரானின் ரெஹானே மொபினி அரானி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.