INDW vs SAW Live Score: 6 ஓவர்களில் 26 ரன்கள்.. பொறுமையுடன் விளையாடும் தென்னாப்பிரிக்கா..!
Ind W vs SA W Live Updates: பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவம்பர் 2, 2025 அன்று நடைபெறும். நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடைபெறும். இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. . இன்று மழை காரணமாக போட்டி தடைபட்டால், நாளை ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும்.
LIVE NEWS & UPDATES
-
IND W vs SA W Final Live Score: 6 ஓவர்களில் 26 ரன்கள்.. பொறுமையுடன் விளையாடும் தென்னாப்பிரிக்கா..!
299 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடும் தென்னாப்பிரிக்கா 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. இதன் காரணமாக, இந்திய அணி விரைவாக தொடக்க வீராங்கனைகளை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும்.
-
IND W vs SA W Final Live Score: 298 ரன்களில் முடித்த இந்திய அணி.. கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்கு..!
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி சர்மா 58 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
INDW vs SAW Final Live Score: 45வது ஓவரில் 262 ரன்கள்.. 300 ரன்களை கடக்குமா இந்திய அணி..?
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 45 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் எடுத்துள்ளது. 4 விக்கெட்களை இழந்தாலும் தீப்தி சர்மா அரைசதம் நோக்கி நகர்ந்து வருகிறார்.
-
INDW vs SAW Final Live Score: கேப்டன் கவுர் 20 ரன்களில் காலி.. கடைசி நேரத்தில் சொதப்பும் இந்திய அணி..!
இந்தியா 39.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை எட்டியுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தற்போது 20 ரன்களுடனும் அவுட்டாகியுள்ளார். தீப்தி சர்மா 34 ரன்களுடனும் விளையாடி வருகிறார்.
-
INDW vs SAW Final Live Score: 3 விக்கெட்களை இந்திய மகளிர் அணி.. குறைந்த ரன் ரேட் வேகம்..!
இந்திய அடுத்த 5 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஷெஃபாலி வர்மாவைத் தொடர்ந்து கடந்த போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது இந்திய மகளிர் அணி 180 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
-
INDW vs SAW Final Live Score: சதம் மிஸ்.. 87 ரன்களில் ஆட்டமிழந்த ஷபாலி வர்மா.. களமிறங்கிய கேப்டன் கவுர்
இந்தியா 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஷஃபாலி வர்மா 87 ரன்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
-
INDW vs SAW Live Score: முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி.. 45 ரன்களில் அவுட்டான ஸ்மிருதி மந்தனா..!
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இருப்பினும், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
-
INDW vs SAW Live Score: அதிரடி வேட்டையில் தொடக்க ஜோடி.. 15 ஓவர்களில் இந்திய அணி 89 ரன்கள்..!
இந்தியா 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 45 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 34 ரன்களும் எடுத்தனர்.
-
Ind W vs SA W Live Match Score: சம்பவம் செய்யும் ஸ்மிருதி – ஷபாலி.. 7 ஓவர்களில் 50 ரன்களை கடந்த இந்திய அணி..!
2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்திய அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 21 ரன்களும், ஷஃபாலி வர்மா 22 ரன்களும் எடுத்தனர்.
-
Ind W vs SA W Live: 3 ஓவர்களில் 13 ரன்கள்.. விக்கெட் இழப்பின்றி ஆடும் இந்திய அணி..!
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.
-
Ind W vs SA W Live: தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் லெவன்..!
லாரா வோல்வார்ட்(கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிசான் கேப், சினாலோ ஜாஃப்டா(விக்கெட் கீப்பர்), அன்னேரி டெர்க்சன், க்ளோ ட்ரையன், நாடின் டி க்ளெர்க், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா
-
Ind W vs SA W Live: இந்திய மகளிர் அணியின் பிளேயிங் லெவன்..!
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்
-
Ind W vs SA W Live: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர்.. முதலில் பேட்டிங் ஆடும் இந்திய மகளிர் அணி..!
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
-
Ind W vs SA W Live: 5 மணிக்கு மேல் போட்டி தொடக்கமா..? ஓவர்கள் குறைப்பா..?
இந்திய மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் இடையிலான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பை ஸ்டேடியத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, மாலை 5 மணிக்குப் பிறகு ஓவர்கள் குறைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தலா 20 ஓவர் போட்டியாக மாற்றப்படலாம்.
-
விரைவில் தொடங்கும் போட்டி
மழையின் தீவிரம் இப்போது குறைந்துள்ளது என்பது ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரைவில் போட்டி தொடங்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் மைதானத்திற்குள் நுழைந்ததும் பெரும் கைதட்டல்களும் கோஷங்களும் எழுந்தன. தற்போது அந்த பகுதியில் மேகங்கள் கலைந்து வானம் தெளிவாகி வருகிறது.
-
ரிசர்வ் நாள் எப்போது?
இந்த முக்கியமான போட்டிக்கு ஐ.சி.சி ஒரு ரிசர்வ் நாளை ஒதுக்கியுள்ளது. அதாவது நவம்பர் 2 ஆம் தேதி போட்டி முடிவடையவில்லை என்றால், நவம்பர் 3 ஆம் தேதி அதை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
-
நவி மும்பையில் கனமழை!
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியை மழை கடுமையாகப் பாதித்துள்ளது. வானிலை அறிக்கைகள் எச்சரித்தது போலவே, நவி மும்பையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் போட்டி தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே சேதமடைந்த வெளிப்புற மைதானம் காரணமாக இது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உண்மையில், டாஸ் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டது, போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் மழை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
கொட்டித்தீர்க்கும் மழையால் தாமதமாகும் போட்டி?
நவி மும்பையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது டாஸ் 3 மணியில் இருந்து 3.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி மேலும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் போட்டி நவம்பர் 3, 2025 நாளை ஒத்தி வைக்கப்படலாம்.
-
மழையால் தாமதமாகும் டாஸ்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கான டாஸ் பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில் மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக டாஸ் தாமதமானது. இதனையடுத்து போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
நேருக்கு நேர் சாதனைகள்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
-
உலகக்கோப்பையில் இரண்டு முறை தோல்வியடைந்த இந்தியா
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் மூன்றாவது இறுதிப்போட்டி இதுவாகும். முந்தைய இரண்டு இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய மகளிர் அணி தோற்றது. அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவம்பர் 2, 2025 அன்று நடைபெறும். நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடைபெறும். இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. . இன்று மழை காரணமாக போட்டி தடைபட்டால், நாளை ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும். இன்று மழை காரணமாக போட்டி கணிசமாக பாதிக்கப்படாது என்று நம்பப்படுகிறது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் சிறப்பான ஆட்டத்தால், அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது.
Published On - Nov 02,2025 2:16 PM