AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து T20.. 8 இந்திய வீரர்கள் படைக்கவிருக்கும் சாதனைகள்!

Indian Players Eyeing Major Records: 2026 அக்டோபர் 22 அன்று தொடங்கும் இந்தியா - நியூசிலாந்து T20 தொடரில், இந்திய அணி தொடரை வெல்லும் நோக்கில் களமிறங்குகிறது. இத்தொடரில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், இஷான் கிஷன் உள்ளிட்ட 8 முக்கிய இந்திய வீரர்கள் பல பெரிய சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. அதிக விக்கெட்டுகள், 2000 ரன்கள், 100 சிக்ஸர்கள் என வீரர்கள் தனிப்பட்ட மைல்கற்களை எட்ட உள்ளனர்.

IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து T20.. 8 இந்திய வீரர்கள் படைக்கவிருக்கும் சாதனைகள்!
இந்திய அணி வீரர்கள்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Oct 2026 23:16 PM IST

நியூசிலாந்துக்கு (IND vs NZ) எதிரான இந்திய அணியின் (Indian Cricket Team) டெஸ்ட் போட்டி 2026 அக்டோபர் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெறும். இந்திய அணி இந்தத் தொடரை சிறப்பாகத் தொடங்கவும், டி20 தொடரை வெல்லவும் விரும்பும். இதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்தில் டி20 தொடரை வென்றபோது, ​​அந்த அணியை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியிருந்தது. தற்போதைய தொடரில், இந்திய அணியின் 8 முக்கிய வீரர்களுக்கு மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. இந்தநிலையில், எந்தெந்த இந்திய வீரர்கள் என்னென்ன சாதனையை படைக்கப்போகிறார் உள்ளிட்ட சாதனைகளை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பிசிசிஐ ரோஹித், கோலிக்கு இந்திய அணியில் இடமளிக்குமா..? உலகக் கோப்பை திட்டம் இதுதான்!

அர்ஷ்தீப் சிங்

  • ஒரு வருடத்தில் அதிகபட்ச டி20ஐ விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.
  • ஒரு டி20 சர்வதேசப் போட்டியின் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.
  • 150 டி20ஐ விக்கெட்டுகளை நிறைவு செய்ய இன்னும் 5 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.
  • டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்ட இன்னும் 12 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.

புவனேஷ்வர் குமார்

  • 300 சர்வதேச விக்கெட்டுகளை நிறைவு செய்ய 6 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.
  • 100 டி20ஐ விக்கெட்டுகளை நிறைவு செய்ய இன்னும் 10 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.
  • டி20 பவர்பிளேயில் அதிக டாட் பந்துகளை வீசுவதற்கு இரண்டே டாட் பந்துகள்தான் தேவையாக உள்ளது.

இஷான் கிஷன்

  • டி20 சர்வதேசப் போட்டிகளில் 2000 ரன்களை நிறைவு செய்ய 46 ரன்கள் தேவையாக உள்ளது.
  • 100 டி20ஐ சிக்ஸர்களை நிறைவு செய்ய இன்னும் 9 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.
  • ஒரு காலண்டர் ஆண்டில் டி20ஐ போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்க 169 ரன்கள் தேவை.
    நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்களைக் குவிக்க இந்தியாவுக்கு 155 ரன்கள் தேவையாக உள்ளது.

திலக் வர்மா

  • டி20 சர்வதேசப் போட்டிகளில் 2000 ரன்களை நிறைவு செய்ய 159 ரன்கள் தேவையாக உள்ளது.
  • 100 டி20ஐ சிக்ஸர்களை எட்ட இன்னும் 7 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.
  • SENA நாடுகளில் அதிக சிக்ஸர்களை அடிக்க இந்தியாவுக்கு 15 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.

சஞ்சு சாம்சன்

  • டி20 சர்வதேசப் போட்டிகளில் 2000 ரன்களை நிறைவு செய்ய 265 ரன்கள் தேவையாக உள்ளது.
  • ஒரு இந்திய விக்கெட் கீப்பராக டி20ஐ போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்க 195 ரன்கள் தேவையாக உள்ளது.
  • 100 டி20ஐ சிக்ஸர்களை நிறைவு செய்ய இன்னும் 13 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.

அபிஷேக் ஷர்மா

  • பவர்பிளேயில் 100 சிக்ஸர்களை எட்ட இன்னும் 4 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.
  • ஓராண்டில் 1000 ரன்கள் எடுத்த முதல் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற இன்னும் 44 ரன்கள் தேவையாக உள்ளது.

ALSO READ: சவால் நிறைந்த நியூசிலாந்து சூழல்.. சூர்யவன்ஷிக்கு டஃபி எச்சரிக்கை!

குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி

  • வருண் சக்கரவர்த்தி 100 சர்வதேச விக்கெட்டுகளை நிறைவு செய்ய இன்னும் 15 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.
  • டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை நிறைவு செய்ய குல்தீப்பிற்கு இன்னும் 2 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.

Follow Us