India vs Zimbabwe T20 WC: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி.. இந்திய அணியின் ‘பிளேயிங் 11’.. கவாஸ்கர் கொடுத்த ஐடியா!!

India Playing XI vs Zimbabwe: இந்தியா தனது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை (பிப்.26) சென்னையில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், அக்சர் படேல் மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

India vs Zimbabwe T20 WC: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் 11.. கவாஸ்கர் கொடுத்த ஐடியா!!

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி

Updated On: 

24 Feb 2026 10:37 AM

 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2026) ‘சூப்பர் 8’ போட்டியில், ஆல்-ரவுண்டர் அக்சர் படேலை பிளேயிங் 11ல் (Playing XI) சேர்க்காதது குறித்து பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. அந்தப் போட்டியில் அக்சருக்குப் பதிலாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியதால், இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், இந்தியா தனது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை (பிப்.26) சென்னையில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

இதையும் படிக்க: T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் இமாலய வெற்றி.. இந்தியாவுக்கு உருவான புதிய சவால்..

அக்சர் படேல் மீண்டும் அணிக்குள் வர வேண்டும்:

ஜிம்பாப்வேக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், அக்சர் படேல் மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். அதற்காக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை நீக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, “ஜிம்பாப்வே அணியில் இடது கை பேட்டர்கள் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, அக்சர் படேலை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.

அர்ஷ்தீப் சீங்கிற்கு பதிலாக அக்சர்:

அதோடு, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக அவரை நீங்கள் களமிறக்கலாம். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அர்ஷ்தீப் சிறப்பாகப் பந்துவீசினார். நல்ல ஃபார்மில் இருக்கும் ஒருவரை மாற்ற நீங்கள் விரும்பமாட்டீர்கள். அதனால், ஒருவேளை மாற்றம் ஏதுமில்லாமல் அதே அணியுடன் இந்தியா விளையாடலாம்,” என்றும் அவர் கூறினார்.

அக்சரை நீக்கியது டேக்டிக்கல் முடிவே:

இதற்கிடையில், இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரயன் டென் டோஸ்கேட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோர், அக்சர் படேலை நீக்கியது முழுக்க முழுக்க டேக்டிக்கல் (Tactical) முடிவே தவிர வேறில்லை என்று உறுதிபடக் கூறினர். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் டென் டோஸ்கேட் பதிலளிக்கையில், கடந்த சில நாட்களாக ஆடும் லெவனைத் தேர்வு செய்ய நாங்கள் நீண்ட நேரம் ஆலோசித்தோம்.

ரிங்கு சிங் தேவை என கருதினோம்:

மிடில் ஆர்டரில் எதிரணி வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் வீரர்களைத் தேர்வு செய்யவே முயன்றோம். இப்போது யோசித்துப் பார்த்தால் அக்சரை விளையாட வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் எனத் தோன்றலாம். ஆனால் அந்த நேரத்தில், எட்டாவது பேட்டராக ரிங்கு சிங் தேவை என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த முடிவு அக்சர் படேலின் முக்கியத்துவத்தையோ அல்லது அணியின் துணை கேப்டன் என்ற அவரது அந்தஸ்தையோ எந்த விதத்திலும் குறைக்காது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: இந்திய அணியின் அதிர்ச்சித் தோல்வியும்.. சர்ச்சையான அணித் தேர்வும்.. விமர்சனத்திற்கு ஆளான கம்பீர், சூர்யகுமார்!!

குரூப் 1-ல் மீதமுள்ள சூப்பர் 8 போட்டிகள்:

பிப் 26: தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்தியத் தீவுகள் (அகமதாபாத்)

பிப் 26: இந்தியா vs ஜிம்பாப்வே (சென்னை)

மார்ச் 1: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே (டெல்லி)

மார்ச் 1: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் (கொல்கத்தா)

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!