IND vs WI: முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்.. திணறிய இந்திய பந்துவீச்சாளர்கள்!
West Indies Opening Partnership: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த இந்தியாவின் முடிவு கேள்விக்குள்ளானது. திருவனந்தபுரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் குவித்து அசத்தினர். கேம்ப்பெல், க்ரீவர்ஸ் அதிரடி ஆட்டத்தால் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) இடையேயான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணி (Indian Cricket Team) சார்பில் டாஸ் வென்ற கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவு இந்திய அணிக்கு சரியானதாகத் தெரியவில்லை. ஏனெனில், திருவனந்தபுரத்தில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 27ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் வரை எடுத்தது. இதன்மூலம், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான ஜான் கேம்ப்பெல் 60 பந்துகளில் 62 ரன்களும், ஜஸ்டின் க்ரீவர்ஸ் 57 பந்துகளில் 66 ரன்களும் எடுத்திருந்தனர்.
ALSO READ: டாஸ் வென்ற இந்திய அணி.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்!
135வது ரன்னில் வீழ்ந்த விக்கெட்:
Just the breakthrough #TeamIndia was looking for ☝️
Kuldeep Yadav strikes to break the opening stand 👏
Updates ▶️ https://t.co/O2cs86p4gq#INDvWI | @mflone_ pic.twitter.com/oaVuIOC4dl
— BCCI (@BCCI) September 27, 2026
3 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறை:
இதற்கிடையில், 2023-க்குப் பிறகு திருவனந்தபுரத்தில் இந்தப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இங்கு விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும். முன்னதாக, 2018-ல், இரு அணிகளும் இங்கு முதன்முறையாக மோதியபோது, இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. அதாவது, திருவனந்தபுரத்தில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன, அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையில், டாஸ் வென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்திய அணி 4 பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஆல்-ரவுண்டர்களை களமிறக்கியது. இந்தப் போட்டியில் அறிமுகமான நமன் திர், கேப்டன் கில் அவர்களாலேயே தனது அறிமுக கேப்பை பெற்று கொண்டார்.
ALSO READ: IND vs WI முதல் ஒருநாள் போட்டி.. இடையில் இடைமறிக்குமா மழை..?
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல், நமன் திர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா
வெஸ்ட் இண்டீஸ்:
ஜான் கேம்ப்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), அமீர் ஜங்கு, ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, கூடகேஷ் மோதி, அல்சாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ்



