ICC Ranking ODI: முதல் இடத்தில் ரோஹித்.. அடுத்த இடத்தில் கோலி.. ஒருநாள் தரவரிசையில் கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்!
RoKo the Top 2: ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே முதல் மற்றும் 2வது இடங்களில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்டாலும் சுப்மன் கில் 5வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

விராட் கோலி - ரோஹித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னேற்றம் அடைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 302 ரன்கள் எடுத்த விராட் கோலி, தற்போது ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து நீடித்து வருகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலும் பேட்டிங் தரவரிசையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு..
Updated ODI ranking list . Virat Kohli moves to no 2 .
We expected him to be the no 1 but ICC’s rigged point system didn’t let it happen. pic.twitter.com/JIEx0whJSM
— Sohel. (@SohelVkf) December 10, 2025
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 2 சதங்கள் ஒரு அரைசதம் உள்பட 302 ரன்கள் எடுத்தார். இப்படியான சிறப்பான பார்ம் காரணமாக விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக, ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திலிருந்த கோலி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது மதிப்பீட்டு புள்ளிகள் 773 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மா 781 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்களுடன் ரோஹித் சர்மா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
டாப் 10ல் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்:
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே முதல் மற்றும் 2வது இடங்களில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்டாலும் சுப்மன் கில் 5வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த முதல் 10 இடங்களில் நான்காவது இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடாத காரணத்தினால் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்கு வந்துள்ளார். அதேநேரத்தில், கே.எல். ராகுல் இரண்டு இடங்கள் முன்னேறி, ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் ஆதிக்கம் என்ன..?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த சிறப்பான செயல்திறன் காரணமாக ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் குல்தீப் யாதவ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி, ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டுமே. அதேபோல், ரவீந்திர ஜடேஜா 2 இடங்கள் சரிந்து 16வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் அர்ஷ்தீப் சிங் 29 இடங்கள் முன்னேறி 66வது இடத்திற்கு வந்துள்ளார்.