AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: அரையிறுதியிலும் காலடி வைக்கிறதா மழை..? இந்தியா – இலங்கை போட்டி நடைபெறுமா?

India vs Sri Lanka Semi-Final: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா அக்டோபர் 1 அன்று இலங்கையை எதிர்கொள்கிறது. காலிறுதி மழையால் ரத்தான நிலையில், அரையிறுதியிலும் மழை அச்சுறுத்தல் உள்ளது. போட்டி தடைபட்டால், ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னணியில் இருப்பதால், இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தெளிவான வானிலை எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரமான பிட்ச் ஆட்டத்தை பாதிக்கலாம்.

Asian Games 2026: அரையிறுதியிலும் காலடி வைக்கிறதா மழை..? இந்தியா – இலங்கை போட்டி நடைபெறுமா?
இந்தியா - இலங்கை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Oct 2026 08:00 AM IST

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (2026 Asian Games) அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் (Indian Cricket Team) இலங்கையும் இன்று அதாவது 2026 அக்டோபர் 1ம் தேதி மோதுகின்றன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆட்டம் நேரலையில் தொடங்கும். டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே நடைபெறும். ஆட்டம் நடைபெறுவதற்கு ஏதுவாக தெளிவான வானிலை நிலவும் என இரு அணிகளும் நம்புகின்றன. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அனைத்து காலிறுதிப் போட்டிகளும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதிப் போட்டிகளில் இந்தியா ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான் ஹாங்காங்கையும் எதிர்கொள்ளவிருந்தன. இலங்கை நேபாளத்தையும், வங்கதேசம் மலேசியாவையும் எதிர்கொள்ளவிருந்தன. இருப்பினும், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாததால், நான்கு காலிறுதிப் போட்டிகளிலும் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவில்லை. அணிகள் தரவரிசையின் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

ALSO READ: தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி.. கில்லுடன் முதலிடத்திற்கு போட்டி!

அரையிறுதியில் மழை பெய்யுமா?


அக்யூவெதர் (AccuWeather) தகவலின்படி, 2026 அக்டோபர் 1ம் தேதி மழை பெய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், மேகமூட்டமாக இருக்கலாம். வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர்ச்சியாக இருக்கும். ஆனாலும், பல நாட்களாகத் தொடரும் மழையின் காரணமாக பிட்ச் ஸ்லோவாக இருக்கலாம். இருப்பினும், வானிலை இந்தப் போட்டியைப் பாதிக்கவும் கூடும். போட்டி நடைபெறுமா இல்லையா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், யார் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்?

மழையின் காரணமாக அரையிறுதிப் போட்டி கைவிடப்பட்டால், தரவரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ள அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரானது ஐசிசி டி20 சர்வதேச அணிகளின் தரவரிசையைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதன்படி உயர்ந்த இடத்தில் உள்ள அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ALSO READ: இறுதிப் போட்டியா? வெண்கல பதக்கமா? ஆசியன் கேமில் இந்தியா – பாகிஸ்தான் எதில் மோதும்?

ஐசிசி டி20 சர்வதேச அணி தரவரிசையில் இலங்கையை விட இந்தியா உயர்ந்த இடத்தில் உள்ளது. எனவே, மழையின் காரணமாக அரையிறுதிப் போட்டி கைவிடப்பட்டால், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்தியா இந்த விதியால் பயனடைந்தது.

Follow Us