மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா…இன்று ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி!

Adhiparasakthi Siddhar Peetam: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச நாளன்று ஆன்மீத ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது. இதற்கான ஆன்மீக ஜோதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சித்தர் பீடத்தில் ஏற்றப்படுகிறது. முன்னேற்பாடுகளை சித்தர் பீட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா...இன்று ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி!

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா

Published: 

31 Jan 2026 09:58 AM

 IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் தினந்தோறும் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இந்த சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஆன்மீக ஜோதி விழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 1) தைப்பூச ஆன்மீக ஜோதி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக இன்று சனிக்கிழமை ( ஜனவரி 31) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை சித்தர் பீட வளாகத்தில் தைப்பூச ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி இருமுடி சுமந்து மாலை அணிந்து சுயம்புவுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 30- ஆம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து, தைப்பூச ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மங்கல இசையுடன் தொடங்குகிறது.

சித்தர் சிலை-பராசக்தி சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

இதற்காக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு பூஜையுடன், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, குரு பீடத்தில் உள்ள அருள்மிகு பங்காரு சித்தர் சிலை, அன்னை பராசக்தி சிலை ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்னர், காலை 9:30 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் செயலாளர் அகத்தியன் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார். இதே போல, மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடைபெறுகிறது. தைப்பூச நாளில் காலை 10:45 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க: தைப்பூசம் 2026.. 6 நாட்கள் விரதம் இருப்பது எப்படி? முழு வழிகாட்டி..

தைப்பூச நாளில் ஆன்மீக ஜோதி ஏற்றம்

இதைத் தொடர்ந்து, மாலை 4: 20 மணிக்கு ஆன்மீக குரு அருள்மிகு பங்காரு சித்தர் வீட்டிலிருந்து ஆன்மீக ஜோதி ஏற்றப்பட்டு ஊர்வலமாக சென்று ஜோதி ஏற்றும் வளாகத்திற்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து, மாலை 6:15 மணி அளவில் ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் ஆன்மீக ஜோதி ஏற்றப்படுகிறது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கோ பூஜை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பின்னர், மூல விளக்கை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைக்க உள்ளார். முன்னதாக தைப்பூச ஜோதி ஊர்வலமானது தொடங்கி ஊர்வலமாக வர உள்ளது. பின்னர், ஆன்மீக ஜோதி ஏற்றப்படுகிறது. இந்த விழாவுக்காக தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா…தர்ம சாலை- கருங்குழி சன்னிதியில் கொடியேற்றம்…பக்தர்கள் பரவசம்!

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ