AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu School Education Budget 2026: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு.. அறிவிப்புகள் என்ன?

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் 'ஒரு பள்ளி நிறைவு திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Aug 2026 12:20 PM IST
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.46,767 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒதுக்கீடு சற்று குறைந்துள்ளது.

1 / 6
மாநிலம் முழுவதும் 3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன. வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2 / 6
கல்வித் திறன் மிக்க மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3 / 6
அரசு பள்ளிகளில் தூய்மை, குடிநீர், கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்ய 'சூப்பர் கிளீன் – சூப்பர் கேம்பஸ்' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதுடன், இதற்காக ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

4 / 6
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் 'ஒரு பள்ளி நிறைவு திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் 'ஒரு பள்ளி நிறைவு திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

5 / 6
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு, ரூ.277 கோடி மதிப்பில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன வடிவமைப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

6 / 6
Follow Us