Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகா சிவராத்திரி 2026.. எந்த ராசியினர் எப்படி வழிபட வேண்டும்? வழிபாடு முறை..

Maha shivratri 2026: மகாஷிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால், முன் ஜென்ம வினைகள் நீங்கும். மன அமைதி கிடைக்கும், உடல் உள்ள ஆன்மிக ஆரோக்கியம் மேம்படும். குடும்ப ஒற்றுமை பெருகும், தொழில், பொருளாதார தடைகள் விலகும் என சாஸ்திரங்கள் உறுதி செய்கின்றன.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Feb 2026 15:41 PM IST
நாடு முழுவதும் மகா சிவராத்திரி மிகச் சிறப்பான திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதிகாசங்கள் கூறுவதன்படி, மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்வது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரும். சாஸ்திரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினரும் குறிப்பிட்ட விசேஷ அபிஷேகங்களைச் செய்வது சிறப்பான பலன்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

1 / 5
மேஷ ராசி: மஞ்சள் பொடிக்கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வதால் வேண்டுதல்கள் நிறைவேறும். வெள்ளம் கலந்த நீரால் அபிஷேகம் செய்தாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரிஷப ராசி: திரவிய பொடியால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் இல்லத்திலும் உள்ளத்திலும் இன்பம் நிலைத்திருக்கும். தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மிதுன ராசி: அரிசி மாவால் அபிஷேகம் செய்தால் நினைத்த நற்காரியங்கள் தடையின்றி நிறைவேறும். கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தாலும் நன்மைகள் கிடைக்கும். கடக ராசி: பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும். சர்க்கரை கலந்த பாலால் அபிஷேகம் செய்து மந்தாரை பூவால் அலங்கரித்தால் தொட்டது துலங்கும்.

2 / 5
சிம்ம ராசி: தயிர் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பான நற்பலன்களை அளிக்கும். சிவப்பு சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்தால் தொழிலிலும் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். கன்னி ராசி: பஞ்சாமிர்தம் அல்லது தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகும். பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் சீராகி, தீராத நோய்கள் நீங்கும். துலாம் ராசி: இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பசும்பாலால் அபிஷேகம் செய்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். விருச்சிக ராசி: பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும். தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்தால் இறைவனின் அருள் பெருகும்.

3 / 5
தனுசு ராசி: விபூதி கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் நன்மைகள் உண்டாகும். குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்து “ஓம் நமசிவாய” மந்திரத்தை ஜபித்தால் வாழ்நாள் முழுவதும் நற்பலன்கள் கிடைக்கும். மகர ராசி: பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வச் செழிப்பும் செல்வாக்கும் கிடைக்கும். நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து வில்வப்பழம் படைத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கும்ப ராசி: சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த வில்வ இலைகளைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் நன்மைகள் கிடைக்கும். இளநீர் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால் வறுமை நீங்கி வளம் பெருகும். மீன ராசி: சந்தனம் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்தால் இல்லத்தில் இன்பம் ஓங்கும்; சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

4 / 5
ஈஸ்வரனுக்கு உகந்த மகத்தான மகாஷிவராத்திரி திருநாளில், சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து, ஒவ்வொரு ராசியினரும் மேற்கண்ட அபிஷேக ஆராதனைகளைச் செய்தால் முன்வினைகள், ஜென்மப் பாவங்கள் நீங்கி இறைவனின் நல்லருள் கிடைக்கும் என்பது வேதங்கள் கூறும் உண்மையாகும்.

5 / 5