AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலக பால் தினம் இன்று: வாழ்வின் ஆதாரமான பாலின் முக்கியத்துவம்..!

World Milk Day 2025: உலக பால் தினம் ஜூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இன்றியமையாத ஊட்டச்சத்து ஆதாரம். பாலில் புரோட்டீன், கொழுப்பு, கனிமங்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பாலின் முக்கியத்துவத்தை உலகளவில் எடுத்துரைக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பால் தினம் இன்று: வாழ்வின் ஆதாரமான பாலின் முக்கியத்துவம்..!
உலக பால் தினம் இன்றுImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Jun 2025 11:20 AM IST

நம் அன்றாட வாழ்க்கையில் பால் ஒரு அத்தியாவசிய உணவாகக் கருதப்படுகிறது. பிறந்த குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை அனைவரின் உணவுப் பட்டியலிலும் பால் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றன. நோய்வாய்ப்பட்டவர்கள், வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் உடலழுத்தம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கும் பால் மிகுந்த நன்மைகளை தருகிறது. இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டு, பாலின் முக்கியத்துவத்தை உலகமெங்கும் விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி உலக பால் தினம் (World Milk Day) ஆகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பால் உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிப்பதோடு, பண்ணையர்வழி வாழ்க்கை முறையையும் வலியுறுத்துவது ஆகும்.

பாசப்பிணைப்பில் பால்

பால் என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பாசப் பிணைப்பின் அடையாளமாகவும் திகழ்கிறது. பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முதல் ஊட்டச்சத்தாகவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் துணை நிற்பதாகவும் பால் அமைகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாதது. பாலில் உள்ள சத்துக்கள், குழந்தைகளின் உடல் வலுப்பெறவும், ஆரோக்கியமாக வளரவும் துணைபுரிகின்றன.

ஊட்டச்சத்துப் புதையல்

பால் ஒரு முழுமையான ஊட்டச்சத்துப் புதையல். இதில் புரதம், கொழுப்பு, மக்னீசியம் போன்ற அத்தியாவசியக் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பசும்பாலில் நீர்ச்சத்து, புரதம், லாக்டோஸ், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தினசரி ஒரு கிளாஸ் பால் அருந்துவதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்கலாம். குறிப்பாகப் பெண்களுக்கு இது எலும்பு ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றுகிறது.

பல்வேறு வகை பாலின் நன்மைகள்

பசும்பால், ஆட்டுப்பால், எருமைப்பால் எனப் பல வகையான பால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பசும்பால் எளிதில் செரிமானமாகக்கூடியது என்பதால், தாய்ப்பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுப்பால் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அதேபோல எருமைப்பால் அதிக கொழுப்பு மற்றும் சத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வகை பாலும் அதன் தனித்துவமான ஊட்டச்சத்துப் பண்புகளைக் கொண்டுள்ளன.

உலக பால் தினம் உருவான கதை

பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், பாலின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) முக்கியப் பங்காற்றியது. 2001ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிவித்தது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி, பால் மற்றும் பால் பொருட்களின் பயன்பாட்டை வலியுறுத்தி உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தினம் பால் உற்பத்தியாளர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.

Follow Us