Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: இட்லிகள் மென்மையாக வரவில்லையா? பஞ்சு போல வர இந்த ட்ரிக்ஸ் உதவும்!

Soft Idlis Tricks: இட்லி சுடும்போது அது கெட்டி தன்மையுடையதாக மாறிவிடுகிறது. பலரும் அளவு தெரியாமல் மாவை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அரைத்துவிடுகிறார்கள். இதனால்தான், இது கெட்டியாக மாறிவிடுகிறது. அதேநேரத்தில், ஹோட்டல்களில் (Hotel) நாம் சாப்பிடும் இட்லிகள் மென்மையாகவும், பஞ்சு போல இருக்கும். நீங்கள் சில எளிய நுட்பங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் ஹோட்டல் பாணியில் இட்லிகளை வீட்டிலேயே செய்யலாம்.

Food Recipe: இட்லிகள் மென்மையாக வரவில்லையா? பஞ்சு போல வர இந்த ட்ரிக்ஸ் உதவும்!
இட்லிகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Dec 2025 18:50 PM IST

தோசைகளை காட்டிலும் இட்லிகள் (Idlis) ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்க்கப்படுகிறது. சிலருக்கு இட்லி மிகவும் பிடிக்கும் என்றாலும், பலருக்கும் இட்லியை சாப்பிட பெரிதாக விரும்புவது கிடையாது. இதற்கு காரணம், இட்லி சுடும்போது அது கெட்டி தன்மையுடையதாக மாறிவிடுகிறது. பலரும் அளவு தெரியாமல் மாவை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அரைத்துவிடுகிறார்கள். இதனால்தான், இது கெட்டியாக மாறிவிடுகிறது. அதேநேரத்தில், ஹோட்டல்களில் (Hotel) நாம் சாப்பிடும் இட்லிகள் மென்மையாகவும், பஞ்சு போல இருக்கும். நீங்கள் சில எளிய நுட்பங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் ஹோட்டல் பாணியில் இட்லிகளை வீட்டிலேயே செய்யலாம். அவற்றை எப்படி செய்வது? அவற்றைச் செய்யும்போது என்ன ட்ரிக்ஸ் செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பழங்களை உட்கொள்வதற்கு முன்! எதனுடன் சாப்பிடக்கூடாது தெரியுமா?

தேவையான பொருட்கள்:

  • கருப்பு உளுந்து – 1 கப்
  • அரிசி – 3 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • பெருஞ்சீரகம்
  • ரவை

தயாரிப்பு முறை

கருப்பு உளுந்து குறைவாக இருந்தால், இட்லி கடினமாக இருக்கும். அதிகமாக இருந்தால், அது மிகவும் பசை தன்மை கொண்டதாக மாறிவிடும். அரிசியை எடுத்துக் கொண்டால், அதை 3: 1 என்ற விகிதத்திலும், ரவையை எடுத்துக் கொண்டால், அதை 2: 1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளலாம். பலர் ஊறவைக்கும்போது அவற்றை ஒன்றாக ஊறவைக்கிறார்கள். அந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். அரிசியை 5-6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பருப்பு – 3 முதல் 4 மணி நேரம் ஊறினால் போதும். இரண்டையும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.

அரைக்கும் ரகசியம்:

முதலில் கருப்பு உளுந்தை நன்றாக அலசி கருப்பு நிற தோல்களை நீக்கவும். அடுத்ததாக கருப்பு உளுந்து மாவு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்பு அரிசியை மிகவும் லேசாக அரைக்காமல், அதற்கு முந்தைய பதத்தில் அரைக்க வேண்டும். பலரும் மாவு அரைக்கும்போது மிக்சியை பயன்படுத்துகிறார்கள். இதற்கு பதிலாக கிரைண்டரைப் பயன்படுத்துவது நல்லது. இப்போது, இவை இரண்டையும் ஒன்றாக கலந்து புளிக்க வைக்கவும். இதுவே இட்லிகளை பஞ்சுபோன்றதாகவும், விரிசல் இல்லாமல் செய்யவும் உதவுகிறது. எனவே, இட்லி மாவை அரிசி மாவுடன் கலந்து இரவு முழுவதும் அல்லது சுமார் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவை அரைப்பதை விட புளிக்க வைப்பது மிகவும் முக்கியம்.

புளிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்..?

புளிக்க வைக்கும் போது மாவை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். அப்போதுதான் இட்லிகள் பஞ்சு போல இருக்கும். ஒரு சிட்டிகை வெந்தயத்தைச் சேர்த்தால் மாவு வீங்கிவிடும். இட்லிகள் செய்வதற்கு முன் காலையில் உப்பு சேர்ப்பது நல்லது. இப்போது இட்லி குக்கரை தயார் செய்யவும். இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை இட்லிக்கு மாவு ஊற்றவும்.

ALSO READ: வாங்கிய பச்சை பட்டாணி வாடிவிடுகிறதா? இதை செய்தால் ப்ரஷாக இருக்கும்!

இட்லிகளை இப்படி 10 முதல் 12 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வளவுதான், சூடான இட்லிகள் தயார். இட்லிகள் மென்மையாக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் கொஞ்சம் தயிரையும் சேர்க்கலாம். அப்படி இல்லையென்றால், சர்க்கரையும் சேர்க்கலாம். இந்த மென்மையான இட்லியை தேங்காய் சட்னி அல்லது உங்களுக்குப் பிடித்த சட்னி மற்றும் சாம்பாருடன் இணைத்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.