Kitchen Tips: கொத்தமல்லி ஃப்ரிட்ஜில் வைத்தாலும் கெட்டு போகிறதா? இந்த 5 ட்ரிக்ஸ் போதும்! ப்ரஷாக வைக்க உதவும்!
Coriander Fresh Tricks: கடைகளில் வாங்கும் கொத்தமல்லி கொத்துகளை பிரிட்ஜில் ஃப்ரீசரில் (Fridge Freezer) வைத்திருந்தாலும், அது கருமையாகி அதன் புத்துணர்ச்சியை இழந்து கெட்டு போகிறது. அதேநேரத்தில், வெளியே வைத்தாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள், கொத்தமல்லி இலைகள் மஞ்சள் நிறமாகவும் காய்ந்தும் போகும்.
கொத்தமல்லி இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. நமது இந்திய உணவு, காய்கறிகளாக இருந்தாலும் சரி, சட்னியாக இருந்தாலும் சரி, கொத்தமல்லியை (Coriander) மேலே தூவாமல் அல்லது அதனுடன் சேர்க்காமல் சுவையற்றதாக இருக்கும். இருப்பினும், கடை அல்லது மார்க்கெட்களில் வாங்கி வரும் கொத்தமல்லி விரைவாக கெட்டு போய்விடுகிறது. நீங்கள் அதை பிரிட்ஜில் ஃப்ரீசரில் (Fridge Freezer) வைத்திருந்தாலும், அது கருமையாகி அதன் புத்துணர்ச்சியை இழக்கிறது. வெளியே வைத்தாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள், கொத்தமல்லி இலைகள் மஞ்சள் நிறமாகவும் காய்ந்தும் போகும். இந்த பிரச்சனையால், கொத்தமல்லி பெரும்பாலும் வீணாகி, அதன் வாசனை நீடிக்காது. உங்கள் வீட்டிலும் இதுபோன்ற பிரச்சனை இருந்தால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அந்தவகையில், கொத்தமல்லியை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க சில குறிப்புகள் இங்கே. எனவே கண்டுபிடிப்போம்.
ALSO READ: பச்சை மிளகாய் வெட்டி கைகளில் எரிச்சலா..? சரிசெய்யும் வீட்டு பொருட்கள்..!




கொத்தமல்லியை பிரஷாக வைப்பது எப்படி..?
- கொத்தமல்லியை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க விரும்பினால், கொத்தமல்லியை எடுத்து கழுவவும். இப்போது கொத்தமல்லியை ஒரு துணி அல்லது டிஷ்யூவில் பரப்பி முழுமையாக உலர வைக்கவும். இலைகள் கெட்டுப்போவதற்கு ஈரப்பதம் மிகப்பெரிய காரணம். அதன்படி, கொத்தமல்லியை முழுமையாக உலர வைப்பது நல்லது. கொத்தமல்லியை பிரஷாக வைத்திருக்க இது ஒரு சிறந்த வழி.
- கொத்தமல்லியை நீண்ட நாட்கள் பிரஷாக வைத்திருக்க, கடைகளில் இருந்து வாங்கிய பிறகு, இதன் இலைகளை கத்தரிக்கோலால் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், அதை தண்ணீரில் நனைத்து ஒரு துணியில் சுற்றி சுற்றி வைக்க வேண்டும். இது பல நாட்கள் பிரஷாக வைத்திருக்கும். கொத்தமல்லியை மூட்டைகளாக வாங்குவோர், தண்ணீரில் சிறிது வினிகரை சேர்த்து தெளிக்கலாம்.
- கொத்தமல்லியை ஒரு துணியில் சுற்றி ஃப்ரீசரில் வைத்து நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கலாம். இது விரைவில் கெட்டுப்போகாமல் தடுக்கும். அப்படி இல்லையென்றால், கொத்தமல்லியை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து ஃப்ரீசரில் வைத்து அதன் புத்துணர்ச்சியைப் பராமரிக்கலாம்.
ALSO READ: முட்டை வேகவைக்கும்போது உடைந்து விடுகிறதா..? தற்காக்கும் எலுமிச்சை!
- கொத்தமல்லியை கழுவி உலர்த்தி, அதன் வேர்களை வெட்டி எடுக்கவும். இலைகளை நன்றாக ஊற வைக்கவும். பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய கொத்தமல்லியை காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். இது நீண்ட நேரம் புதியதாக இருக்கும்.
- ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் கொத்தமல்லியை வைக்கலாம். ஒரு கிளாஸ் அல்லது பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீரில் நிரப்பவும். இப்போது, கொத்தமல்லி தண்டுகளை தண்ணீரில் வைக்கவும். அவற்றை பாலிதீன் அல்லது ஒரு மூடியால் லேசாக மூடி, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இந்த வழியில், கொத்தமல்லி 5-6 நாட்கள் புதியதாக இருக்கும்.