Kitchen Hacks: முட்டை வேகவைக்கும்போது உடைந்து விடுகிறதா..? தற்காக்கும் எலுமிச்சை!
Egg Boiling Hacks: எலுமிச்சை சாற்றில் உள்ள லேசான அமிலம் தண்ணீரின் pH அளவை சமநிலைப்படுத்தி முட்டையின் வெளிப்புற அடுக்கை வலுப்படுத்துகிறது. மேலும், இது முட்டைகளை விரைவாகவும் சமமாகவும் வேகவைக்க உதவுகிறது. அதன்படி, நீங்கள் சரியாக அளவில் வேகவைத்த முட்டைகளை சமைக்க விரும்பினால், எலுமிச்சை சாற்றை சேர்க்க மறக்காதீர்கள்.
சமைக்கும்போது முட்டையை (Eggs) வேகவைப்பது ஒரு எளிய வேலையாக உங்களுக்கு தோன்றலாம். இருப்பினும், சில நேரங்களில் முட்டை ஓடு விரிசல் அடைந்து முட்டையில் வெள்ளைக்கரு வெளியேற தொடங்கும். அப்படி இல்லையென்றால், முட்டை எந்த அளவிற்கு உள்ளே வெந்துள்ளது என்பதை அறியாமல், அரைகுறை வெந்த அளவில் எடுத்து விடுவோம். மேலும், சில நேரங்களில் கொதித்த பிறகு உரிக்க கடினமாகிவிடும். இதுபோன்ற சூழ்நிலையில், நாங்கள் சொல்லும் இந்த டிரிக்ஸை பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், முட்டையை வேகவைக்கும் போது தண்ணீரில் சிறிது எலுமிச்சை (Lemon) சாற்றை சேர்க்கலாம். எலுமிச்சை சாறு சேர்ப்பதன்மூலம் முட்டை ஓடு உடைப்பதை தடுப்பது மட்டுமல்லாமல், கொதித்த பிறகு எளிதாக உரிக்கவும் உதவி செய்யும்.
எலுமிச்சை சாற்றில் உள்ள லேசான அமிலம் தண்ணீரின் pH அளவை சமநிலைப்படுத்தி முட்டையின் வெளிப்புற அடுக்கை வலுப்படுத்துகிறது. மேலும், இது முட்டைகளை விரைவாகவும் சமமாகவும் வேகவைக்க உதவுகிறது. அதன்படி, நீங்கள் சரியாக அளவில் வேகவைத்த முட்டைகளை சமைக்க விரும்பினால், எலுமிச்சை சாற்றை சேர்க்க மறக்காதீர்கள்.
ALSO READ: பச்சை மிளகாய் வெட்டி கைகளில் எரிச்சலா..? சரிசெய்யும் வீட்டு பொருட்கள்..!




முட்டைகளை வேகவைக்கும்போது எலுமிச்சை ஏன் சேர்க்க வேண்டும்?
முட்டைகளை வேகவைக்கும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்ப்பது முட்டை ஓடு வெடிப்பதைத் தடுக்கிறது. மேலும், வேகமாக கொதிக்க வைப்பதை எளிதாக்குகிறது. எலுமிச்சையில் உள்ள அமிலம் தண்ணீரின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது, முட்டை ஓட்டை வலுவானதாக மாற்றி, கொதிக்கும் போது உடைவதைத் தடுக்கிறது. எலுமிச்சை சாறு தண்ணீருடன் இணையும்போது சிறிது அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. இது விரைவான வெப்ப பரிமாற்றத்திற்கு உதவுகிறது. இதனால், முட்டைகள் ஒப்பீட்டளவில் சாதாரண நேரத்தை காட்டிலும், விரைவாக வேக தொடங்குகிறது.
முட்டையின் சுவை மாறுமா.?
முட்டை வேக வைக்கும்போது எலுமிச்சை சாறு சேர்க்கப்படுவதால், பலரும் அதன் சுவை மாறும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. எலுமிச்சை சாறு மிகக் குறைந்த அளவில் சேர்க்கப்படுவதால், அதன் சுவை முட்டைகளின் சுவையை மாற்றாது. இது கொதிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. உங்களிடம் எலுமிச்சை இல்லையென்றால், அதற்கு பதிலாக சிறிதளவு வினிகரைச் சேர்க்கலாம். இது தண்ணீரை சிறிது அமிலமாக்கி, முட்டை ஓடு வெடிப்பதைத் தடுக்கிறது. அதன்படி, தண்ணீரை கொதிக்க வைப்பதற்கு முன், அதில் ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது வினிகரை சேர்த்து, பின்னர் முட்டைகளை எப்போதும் போல் வேகவைக்கவும்.
ALSO READ: வித்தியாசமான முறையில் சூப்பரான முட்டை குருமா.. 10 நிமிடத்தில் செய்வது எப்படி..?
எலுமிச்சை சாறு சேர்ப்பதால் முட்டை ஓடுகள் எளிதாக உரிக்க உதவுமா?
எலுமிச்சையில் உள்ள அமிலம், முட்டையின் ஓடுக்கும் வெள்ளைக் கருவுக்கும் இடையே உள்ள சவ்வைத் தளர்த்தி, கொதித்த பிறகு முட்டையை எளிதாக உரிக்க உதவி செய்கிறது.