AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாங்க சுற்றிப்பார்க்கலாம்… தென்னிந்தியாவின் ஐந்து மலைப்பிரதேசங்கள்…!

Secret Getaways: தென்னிந்தியாவின் ஊட்டி, குன்னூர், மூணார், கூர்க் மற்றும் வயநாடு ஆகிய மலைப்பிரதேசங்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களின் அந்தரங்க விடுமுறையைக் கழிக்கத் தேர்ந்தெடுக்கும் முக்கிய இடங்களாகத் திகழ்கின்றன. புகழ்பெற்ற நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரும் தங்களின் ‘ஆஃப் கிரிட்’ (Off-the-grid) விடுமுறையை இங்கேதான் கழிக்கின்றனர்.

வாங்க சுற்றிப்பார்க்கலாம்… தென்னிந்தியாவின் ஐந்து மலைப்பிரதேசங்கள்…!
தென்னிந்தியாவின் மலைப்பிரதேசங்கள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Apr 2026 13:17 PM IST

பொதுவாகத் திரை நட்சத்திரங்கள் என்றாலே மாலத்தீவு கடற்கரைகள், துபாய் வானளாவிய கட்டிடங்கள் அல்லது லண்டன் கஃபேக்களில் அமர்ந்திருப்பதைத்தான் நாம் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பார்க்கிறோம். ஆனால், கேமரா வெளிச்சம் படாத, அமைதி மட்டுமே நிறைந்த சில இடங்களை அவர்கள் தங்களின் ரகசியப் புகலிடங்களாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தென்னிந்தியாவின் மலைப்பிரதேசங்கள், பிரபலங்களின் அந்தரங்கச் சுற்றுலாவிற்குப் புகழ்பெற்ற இடங்களாக மாறி வருகின்றன. புகழ்பெற்ற நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரும் தங்களின் ‘ஆஃப் கிரிட்’ (Off-the-grid) விடுமுறையை இங்கேதான் கழிக்கின்றனர்.

1. ஊட்டி: நட்சத்திரங்களின் பாரம்பர்யத் தளம்

தென்னிந்தியாவின் மலைப்பிரதேசங்களில் நட்சத்திரங்களின் வருகையை எளிதில் அடையாளம் காணக்கூடிய இடம் ஊட்டி. அலியா பட், ஜான்வி கபூர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அவ்வப்போது இங்கிருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன் முதல் ஷாருக்கான் வரை பல ஜாம்பவான்களின் படப்பிடிப்புக் களமாக ஊட்டி இருந்துள்ளது. இங்குள்ள ‘சவோய்’ மற்றும் ‘பெர்ன்ஹில்ஸ் பேலஸ்’ போன்ற பாரம்பரிய விடுதிகள் நட்சத்திரங்களின் விருப்பத்தேர்வாக உள்ளன. குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களுக்கு ஊட்டியின் லவ்டேல் பகுதியில் ‘ஹைடு அவே’ (Hideaway) என்ற சொந்த வில்லா உள்ளது. இது தற்போது பொதுமக்களின் தங்குதலுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

2. குன்னூர்: கூட்ட நெரிசலற்ற அமைதித் தீவு

ஊட்டிக்கு மிக அருகிலேயே இருந்தாலும், குன்னூர் முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைதியை வழங்குகிறது. ஆமிர் கான் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த நீலகிரிப் பகுதியில் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. கங்கனா ரணாவத் போன்ற நடிகைகளின் படப்பிடிப்புகள் இங்கு நடந்தாலும், சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஆரவாரம் இன்றி, அமைதியைத் தேடும் பிரபலங்களுக்குக் குன்னூர் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது.

3. மூணார்: கேரளாவின் எழில் கொஞ்சும் எஸ்கேப்

மூணார் என்றாலே தேயிலைத் தோட்டங்களும், மூடுபனியும் தான் நினைவுக்கு வரும். தீபிகா படுகோன் மற்றும் ஜான்வி கபூர் போன்ற நடிகைகள் கேரளாவின் இந்த மலை எழிலை விரும்புவதாகப் பல்வேறு பயணக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள ‘பாறக்கட் நேச்சர் ஹோட்டல்’ போன்ற உயர்ரக விடுதிகள், பிரபலங்களுக்குத் தேவையான அந்தரங்கத்தையும், ஆடம்பரத்தையும் ஒருசேர வழங்குகின்றன.

Also Read: குன்னூர்: நீலகிரியின் பசுமை சொர்க்கத்தில் ஒரு மயக்கும் பயணம்

4. கூர்க்: கர்நாடகாவின் ஸ்காட்லாந்து

பெங்களூரைத் தளமாகக் கொண்ட பிரபலங்களுக்குக் கூர்க் ஒரு மிகச்சிறந்த வார இறுதித் தளம். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா போன்ற நட்சத்திர தம்பதிகள், இயற்கையோடு இணைந்த தனிமையான விடுமுறைக்காகக் கூர்க்கைத் தேர்ந்தெடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘தாஜ் மடிக்கேரி’ போன்ற தங்கும் விடுதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால், கேமராக்களின் தொந்தரவின்றி ஓய்வெடுக்க இவை ஏதுவாகின்றன.

5. வயநாடு: அடர்ந்த காடுகளும் தனிமையும்

கேரளாவின் வயநாடு பகுதி மலையாளத் திரைத்துறையினரின் விருப்பமான இடமாகும். பிருத்விராஜ் சுகுமாரன், பகத் பாசில் போன்ற நடிகர்கள் இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் எக்கோ-ரிசார்ட்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘வைல்ட் பிளானட்’ போன்ற காட்டுப்பகுதி விடுதிகள் டொவினோ தாமஸ், நித்யா மேனன் போன்ற நட்சத்திரங்களை உபசரித்ததன் மூலம், இந்த இடம் பிரபலங்களின் ரகசியத் தளம் என்பது உறுதியாகியுள்ளது.

Follow Us