Monsoon Insects: மழைக்காலத்தில் இரவில் படையெடுக்கும் பூச்சிகள்.. லைட் ஆன் பண்ண முடியாமல் தவிப்பா..? விரட்ட எளிய வழிகள்!
Rainy Season Insects Control: மழைக்காலத்தில் வீட்டில் பூச்சித் தொல்லை அதிகரிக்கும். இயற்கை வழிகளில் இதனைத் தவிர்க்க, துளசி, வெங்காயம், வேப்ப எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். யூகலிப்டஸ் எண்ணெய், வெங்காயச் சாறு அல்லது வேப்ப எண்ணெய் கரைசலை ஸ்ப்ரே செய்து பூச்சிகளை விரட்டலாம்.

வெயில் காலத்திற்கு (Summer) பிறகு வரும் மழைக்காலம் குளிர்ச்சியை தந்து வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த மழைக்காலம் குளிர்ச்சியை தந்தாலும், அதனுடன் பல்வேறு தொல்லைகளும் நம்மை வந்தடையும். இதில், முக்கியமான பிரச்சனை வீடுகளில் லைட் எரியும்போது, பூச்சிகள் (Insects) தொல்லை கொடுக்கும். குறிப்பாக இரவில், அறை விளக்கு எரிந்தவுடன் , இந்த பறக்கும் பூச்சிகள் நேரடியாக வீட்டிற்குள் கூட்டமாக நுழைந்து, சாப்பிடும் சாப்பாடு, தூக்கத்தை கெடுப்பது, முகம் மற்றும் உடல்களில் ஊறுவது, சமையலறையில் சமைக்கும்போது என பல்வேறு எரிச்சல்களை தரும். மழைக்காலத்தில் அதிகளவில் உற்பத்தியாகும் பூச்சிகள் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகின்றன . அதனால்தான் அவை பெரும்பாலும் வீட்டில் தெரு விளக்குகள் மற்றும் குழாய் விளக்குகளைச் சுற்றி வட்டமிடுகின்றன. இந்த பூச்சிகளால் , வீட்டின் சூழ்நிலையை கெட்டுவிடும், சில சமயங்களில் அவை உணவுப் பொருட்களையும் பாதிக்கின்றன . இதுபோன்ற சூழ்நிலையில், இந்த எளிதான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் அவற்றை எளிதாக அகற்றலாம்.
துளசி:
துளசி செடி மத ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மட்டுமல்லாமல், இது பூச்சிகளை விரட்டவும் மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது. பூச்சிகள் துளசியின் வாசனையை விரும்புவதில்லை, எனவே, இவற்றை கண்டாலே மிரண்டு ஓடும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் அறை அல்லது ஜன்னல் அருகே ஒரு துளசி செடியை நட்டால், பூச்சிகள் உள்ளே வராமல் தடுக்கலாம்.
ALSO READ: வீட்டில ஈக்கள் தொல்லையா? இதை செய்தால் சிம்பிளா விரட்டலாம்!




வெங்காயம்:
நம் சமையலறையில் எப்போதும் இருக்கும் உணவு பொருள் வெங்காயம். இந்த வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அந்தவகையில், வெங்காயம்ன மழைக்காலத்தில் உற்பத்தியாகி பறக்கும் பூச்சிகளைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயச் சாற்றைப் பிரித்தெடுத்து, அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி , ஜன்னல்கள், கதவுகள் மற்றும் லைட்களை சுற்றி தெளிக்கவும் . வெங்காயத்தின் இந்த கடுமையான வாசனை பூச்சிகள் வீட்டை விட்டு வெளியேற உதவி செய்யும்.
வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணெய் பூச்சிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என கருதப்படுகிறது. இதை தண்ணீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தெளிக்கவும் . இது பூச்சிகள் உள்ளே நுழைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் பூச்சிகளை விரட்டும்.
சுத்தம் செய்தல்:
மழைக்காலத்தில் ஈரப்பதம் மற்றும் அழுக்கு காரணமாக பூச்சிகள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன . இதுபோன்ற சூழ்நிலையில் , ஜன்னல்கள் மற்றும் கதவுகளை எலுமிச்சை மற்றும் வினிகர் கரைசலால் சுத்தம் செய்யவும் . குழாய் விளக்குகள் மற்றும் பல்புகளை நன்கு துடைக்கவும் . இது பூச்சிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும்.
ALSO READ: மழை காலங்களில் உடைகளில் சேறு படிகிறதா? தவிர்க்க இதை பண்ணுங்க!
யூகலிப்டஸ் எண்ணெய்:
2 ஸ்பூன் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் சிட்ரோனெல்லா அல்லது யூகலிப்டஸ் எண்ணெயை தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே தயாரிக்கலாம் . தினமும் விளக்கு மற்றும் ஜன்னல் அருகே தெளித்தால், அதன் வாசனை பூச்சிகளை விரட்டும் .