Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kitchen Smell Removal: சமையலறை துர்நாற்றத்தை நீக்க 6 எளிய வழிகள்.. இது புத்துணர்ச்சியை கொடுக்கும்..!

Eliminate Kitchen Odors: சமையலறையில் இருந்து வரும் கெட்ட வாசனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? பயன்படுத்திய டீத்தூள், இலவங்கப்பட்டை, கிராம்பு, எலுமிச்சை சாறு, சமையல் சோடா, வினிகர் மற்றும் அடுப்புக்கரி போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி சமையலறை துர்நாற்றத்தை எளிதாக நீக்கலாம். கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும்.

Kitchen Smell Removal: சமையலறை துர்நாற்றத்தை நீக்க 6 எளிய வழிகள்.. இது புத்துணர்ச்சியை கொடுக்கும்..!
சமையலறை துர்நாற்றம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Aug 2025 15:51 PM

வீட்டின் மிக முக்கியமான பகுதி சமையலறை. இங்கு ஆரோக்கியமும், உடல் நலமும் (Health) பாதுகாக்கப்படுகிறது. சமையலறையில் முழு குடும்பத்திற்கும் சுவையான உணவுகள் தினம் தினம் பரிமாறப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலும் சமையலறையிலிருந்து சமைக்கப்படும்போது வெளியேறும் சமையல் வாசனையுடன், சமைத்த பிறகு வெளியேறும் குப்பைகளின் வாசனை (Kitchen Odors) சுற்றுச்சூழலை கெடுப்பது மட்டுமின்றி, நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இந்த கெட்ட வாசனை வீட்டை அசௌகரியமாக்குவது மட்டுமல்லாமல், பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களையும் அதிகமாக ஈர்த்து, இது நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், நோய்களை உண்டாக்குவதற்கு முன், கெட்ட வாசனைகளை நீங்கள் சில தந்திரங்களை பின்பற்றி விரட்டலாம்.

பயன்படுத்தப்பட்ட டீ தூள்:

நாம் தினமும் பயன்படுத்தப்பட்ட மீதமுள்ள டீ தூளை குப்பைத் தொட்டி அல்லது சிங்க்கின் அருகில் வைப்பது துர்நாற்றத்தை உறிஞ்சிவிடும். அதை ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் நிரப்பி சமையலறையின் ஒரு மூலையில் வைக்கவும். இது கெட்ட வாசனையை உறிஞ்சிவிடும்.

ALSO READ: மழைக்காலத்தில் அரிசியை அட்டாக் செய்யும் பூச்சிகள்.. பாதுகாக்க பக்கா ஃப்ளான் இதோ!

இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு வாசனை:

நாம் சமையலறையில் பயன்படுத்தப்படும் அஞ்சறை பெட்டியில் இருந்து சிறிது இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சமையலறையில் ஏதேனும் ஒரு மூலையில் வைக்கவும். இதன் வாசனை துர்நாற்றத்தை நீக்குகிறது. இது ஒரு இயற்கை அறை புத்துணர்ச்சி வாசனையை கொடுக்கும்.

எலுமிச்சை மற்றும் சமையல் சோடா:

எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை குப்பைத் தொட்டியிலோ அல்லது தொட்டியிலோ ஊற்றினால் துர்நாற்றம் உடனடியாக நீங்கும். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்வது சமையலறையை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவி செய்யும்.

வினிகர் ஸ்ப்ரே:

வெள்ளை வினிகர் ஒரு இயற்கையான கெட்ட வாசனை நீக்கியாக செயல்படுகிறது. அதன்படி, சமையலறையிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க தண்ணீரில் கலந்து தெளிக்கவும். தினமும் சிங்க் மற்றும் குப்பைத் தொட்டியைச் சுற்றி தெளிக்கவும்..

அடுப்பு கரி:

பயன்படுத்தப்பட்ட கரி அல்லது கரி தூளாணது நாற்றங்களை உறிஞ்சுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை சமையலறையில் வைப்பது உடனடியாக துர்நாற்றத்தைக் குறைக்க உதவி செய்யும். அதை ஒரு சிறிய பை அல்லது ஜாடியில் நிரப்பி சமையலறையின் மூலைகளில் வைக்கவும்.

ALSO READ: எலுமிச்சைத் துண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? ஆச்சரிய தகவல்

சரியான கழிவுகளை அகற்றும் பழக்கம்:

சமையலறையில் நீண்ட நேரம் கழிவுகள் தேங்க விடாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குப்பைத் தொட்டியை காலி செய்து வெளியே கொண்டு செல்லுங்கள். அதேபோல், குப்பைத் தொட்டியில் நேரடியாக கழிவுகளை கொட்டாமல், ஒரு பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி கழிவுகளை போடுங்கள்.