Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எலுமிச்சைத் துண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? ஆச்சரிய தகவல்

Kitchen Tip : உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமிப்பது முதல் ஃபிரிட்ஜ் நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. அதனை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் எலுமிச்சையைப் பயன்படுத்தி ஃபிரிட்ஜை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என விவரமாக பார்க்கலாம்.

எலுமிச்சைத் துண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2025 22:50 PM

எலுமிச்சையில் (Lemon) பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அழகு முதல் ஆரோக்கியம் வரை, பல விஷயங்களுக்கு பயன்படும் சூப்பர் ஃப்ரூட்டாக கருதப்படுகிறது. சிலர்  அசைவ உணவில் சுவையை கூட்டுவதற்கா எலுமிச்சையை பயன்படுத்துகின்றனர். எலுமிச்சை உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. இதனால் வேறு பயன்பாடுகளும் உள்ளன. எலுமிச்சையை பாதியாக வெட்டி அதனை ஃப்ரிட்ஜில் (Fridge) வைப்பதில் சில அற்புதமான நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் சிட்ரிக் அமில பண்புகள் ஃப்ரிட்ஜை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இன்றைய அவசர காலகட்டத்தில் எல்லோராலும் தினமும் மார்க்கெட் சென்று பொருட்கள் வாங்க முடிவதில்லை. பெரும்பாலான குடும்பங்கள் ஒருவராத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்துகிறார்கள். மேலும் பலர் முதல் நாள் சமைத்த உணவு மீதமானால் அதனை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் அதனை சூடு செய்து சாப்பிடுகிறார்கள். இப்படி நம் வாழ்க்கையை எளிதாக மாற்றும் ஃபிரிட்ஜை தூய்மையாக பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் எலுமிச்சை அதற்கு பெரிதும் உதவுகிறது.

இதையும் படிக்க : காலையில் புத்துணர்ச்சியுடன் எழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்..!

துர்நாற்றத்தை நீக்குகிறது

நீங்கள் ஃபிரிட்ஜை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், சில நேரங்களில் அது துர்நாற்றம் வீசுவது இயல்பானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைப்பது துர்நாற்றத்தை நீக்கும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், துர்நாற்றத்தை உறிஞ்சி, குளிர்சாதன பெட்டியை புதியதாக வைத்திருக்கும்.

உணவு நீண்ட நேரம் புதியதாக இருக்கும்

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் சில உணவுகள் விரைவாக கெட்டுவிடும். இந்த பிரச்னையைத் தடுக்க எலுமிச்சை துண்டுகளைப் பயன்படுத்தலாம். எலுமிச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உணவு விரைவாக கெட்டுப்போவதைத் தடுக்கின்றன. இருப்பினும், இந்த நோக்கத்திற்காக எப்போதும் புதிய, சுத்தமான எலுமிச்சை துண்டுகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிக்க : சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்துகள்: தடுக்கும் வழிகளும், நிபுணர் ஆலோசனைகளும்!

காற்றை இயற்கையாகவே சுத்திகரிக்கிறது

எலுமிச்சை துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், அது இயற்கையாகவே குளிர்சாதன பெட்டியில் உள்ள காற்றை சுத்திகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சிட்ரிக் அமிலம் குளிர்சாதன பெட்டியில் உள்ள காற்றை புதியதாக வைத்திருக்கின்றன. இது குளிர்சாதன பெட்டியில் பாக்டீரியா மற்றும் தொற்று அபாயத்தையும் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.