AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

80-ஸ் லுக் வேணுமா? ஒரே கிளிக்கில் உங்களை ரெட்ரோ ஸ்டாராக மாற்றும் ஏஐ!

80s Retro Trend: இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்களின் புகைப்படங்களை 1980-களின் ரெட்ரோ பாணிக்கு மாற்றும் புதிய டிரெண்ட் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சாட் ஜிபிடி (ChatGPT) செயலியில் பயனர்கள் தங்களது தற்போதைய புகைப்படத்தைப் பதிவேற்றி, 80-களின் ஆடை மற்றும் தலைமுடி அலங்காரக் குறிப்புகளை அளிப்பதன் மூலம் இத்தகைய விண்டேஜ் புகைப்படங்களை எளிதாக உருவாக்க முடியும்.

80-ஸ் லுக் வேணுமா? ஒரே கிளிக்கில் உங்களை ரெட்ரோ ஸ்டாராக மாற்றும் ஏஐ!
80ஸ் ரெட்ரோ டிரெண்ட்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 10 Sep 2026 06:06 AM IST

கடந்த ஆண்டுகளில் அனிமேஷன் புகைப்பட பாணிகள் இணையத்தில் பிரபலமடைந்த நிலையில், தற்போது 1980-ஆம் ஆண்டுகளின் ரெட்ரோ பாணி புகைப்படங்கள் சமூக வலைதள உலகைக் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘Add Yours’ எனும் வசதியைப் பயன்படுத்திப் பயனர்கள் தங்களின் படங்களை 80-களின் ரெட்ரோ தோற்றத்திற்கு மாற்றிப் பகிர்ந்து வருகின்றனர். அன்றைய காலகட்டத்தில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு, தனித்துவமான தலைமுடி அலங்காரம் மற்றும் பழமையான சினிமா தோற்றங்களை நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது.

ஏஐ ரெட்ரோ டிரெண்டிற்குப் பின்னால் உள்ள சுவாரசியம்

கடந்த காலத்தில் அல்லது பழைய காலக் கட்டத்தில் நாம் பிறந்திருந்தால் எப்படி இருந்திருப்போம் என்ற ஆர்வமே இந்த டிரெண்ட் உலகளவில் அலைமோதக் காரணமாகும். அந்த சகாப்தத்தின் திரைக்கலை மற்றும் ஆடைப் பண்பாட்டை அனுபவித்து அறியாத தற்போதைய தலைமுறையினருக்கு, இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒரு வரலாற்றுப் பயணமாக அமைகிறது. சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இந்த மாற்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டு 80-களின் ரெட்ரோ புகைப்படங்களை ஆர்வத்துடன் பதிவேற்றி வருகின்றனர்.

சாட் ஜிபிடி மூலம் 80-களின் ரெட்ரோ புகைப்படங்களை உருவாக்குவது எப்படி?

உங்களின் புகைப்படத்தையும் 80-களின் ரெட்ரோ பாணிக்கு மாற்ற சாட் ஜிபிடி (ChatGPT) செயலியை எளிதாகப் பயன்படுத்தலாம். முதலில் செயலியில் உள்ள உரையாடல் பெட்டியில் “What Would I have Looked Like in the 80s” என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் சேர்க்கை குறியீட்டை (+) பயன்படுத்தி உங்களின் தற்போதைய தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து உங்களுக்கு விருப்பமான 80-களின் கல்லூரி பாணி, ரெட்ரோ பின்னணி, விண்டேஜ் ஆடை மற்றும் அணிகலன்களுக்கான குறிப்புகளை (Prompts) அளித்தால், சாட் ஜிபிடி ஒரு சில நொடிகளில் அட்டகாசமான ரெட்ரோ புகைப்படத்தை உருவாக்கித் தரும்.

Also Read: நயன்தாராவின் மின்னும் அழகிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!

சினிமா பிரபலங்களையும் கவர்ந்த புதிய டிரெண்ட்

இந்த புதிய ரெட்ரோ புகைப்பட மோகம் சாமானியர்களை மட்டுமன்றி திரைத்துறை பிரபலங்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் மற்றும் மஞ்சிமா மோகன் உள்ளிட்டப் பலர் தங்களது 80-களின் பிரத்யேக ரெட்ரோ தோற்றப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு, தனித்துவமான தலைமுடி அலங்காரம் மற்றும் பழமையான சினிமா தோற்றங்களை நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us