Ear Cleaning: காதுகளில் அதிகப்படியான அழுக்குகளா..? பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?
Earwax Cleaning: காது மெழுகு பெரும்பாலும் அதிகரிக்கும்போது தானாகவே வெளியேறும். அதேவேளையில், இது சில நேரங்களில் காதுக்குள் குவிந்துவிடும். இதை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் பலரும் கடைகளில் கிடைக்கும் காது குடையும் பஞ்சை கொண்டு உள்ளே தள்ளிவிடுகிறார்கள். இது காதில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
காது மெழுகு (Earwax) என்பது காது குழாய்களுக்குள் உள்ள சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் போன்ற ஒட்டும் பொருளாகும். இதுமட்டுமின்றி, வெளிப்புற குப்பைகள் என்று அழைக்கப்படும் தூசி, அழுக்கு, பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் (Bacteria) போன்றவை பெரும்பாலும் காதில் குவியும்போது பாதுகாக்கும். சில நேரங்களில், இந்த காது மெழுகின் அளவு அதிகரிக்கும்போது, வலியை ஏற்படுத்தும். இதற்கு காரணம், காது வலி, கனத்தன்மை, சீழ் பிடித்தல், காது கேட்கும் திறன் போன்றவையும் ஏற்படலாம். அந்தவகையில், காது மெழுகை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
காது மெழுகு அதிகரித்தால் என்ன செய்யக்கூடாது..?
காது மெழுகு பெரும்பாலும் அதிகரிக்கும்போது தானாகவே வெளியேறும். அதேவேளையில், இது சில நேரங்களில் காதுக்குள் குவிந்துவிடும். இதை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் பலரும் கடைகளில் கிடைக்கும் காது குடையும் பஞ்சை கொண்டு உள்ளே தள்ளிவிடுகிறார்கள். இது காதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த முறை மிகவும் ஆபத்தானது. இது காதின் மென்மையான புறணியை சேதப்படுத்தும். மேலும் சில நேரங்களில் பஞ்சு உள்ளே சிக்கிக்கொள்ளும். எனவே, இவ்வாறு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
ALSO READ: மழையால் தேங்கிய நீர் பாதத்தில் வெடிப்பை தரும்.. வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?




காதில் அதிகப்படியான மெழுகு படிந்தால், காதில் கனமான உணர்வு அல்லது அடைப்பு, கேட்கும் திறன் இழப்பு, வலி அல்லது அரிப்பு, லேசான இருமல், காதில் சத்தம் அல்லது சலசலப்பு மற்றும் சில நேரங்களில் தலைச்சுற்றல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
காது மெழுகை எவ்வாறு அகற்றுவது?
காதில் மெழுகு அதிகமாக இருந்தால், முதலில் அதை மென்மையாக்குவது முக்கியம். அதன்படி, மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் காது சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம். இதை, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை 2 சொட்டுகள் விடலாம். இப்படி செய்வதன்மூலம், மெழுகு மென்மையாகி, அது தானாகவே வெளியேறும்.
ALSO READ: பல் ஆரோக்கியத்தை அழிக்கும் பழக்கவழக்கங்கள்.. இவற்றை தவிர்ப்பது நல்லது..!
இப்படி, காது மெழுகு தானாகவே வெளியேறவில்லை என்றால், ஒரு ENT மருத்துவரிடம் சென்று சரியான முறையில் சுத்தம் செய்யலாம். மருத்துவர் மெழுகை மெதுவாக அகற்ற உறிஞ்சும் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். பாட்டி வைத்தியம் என்று பலரும் சூடான எண்ணெயை காய்ச்சி காதுகளில் ஊற்றுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. மருத்துவர் ஆலோசனை எதுவும் இன்றி, இத்தகைய செயல்களை செய்யாதீர்கள்.