AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ear Problems: வானிலை மாற்றத்தால் காது வலியா..? இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது?

Prevent Ear Infections: வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சில நேரங்களில் காதுகளில் காது மெழுகு படிதல், காது அடைப்பு, அழுத்த மாற்றங்கள் மற்றும் காது மந்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். சில நேரங்களில் இவை அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சைனஸ் மற்றும் தொண்டை தொற்றுகளும் அதிகரிக்கும்

Ear Problems: வானிலை மாற்றத்தால் காது வலியா..? இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது?
காது தொற்றுImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Nov 2025 15:41 PM IST

ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவ மாற்றத்தின்போதோ (Climate Change) அல்லது வானிலை மாற்றங்களின்போதோ வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எளிதாக காதுக்குள் பரவி வேகமாகப் பெருகி, தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதனை தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் (Fever) அல்லது மூக்கடைப்பு ஆகியவை காதுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி பிரச்சனையை தரும். மேலும், இது காதில் கனத்தன்மை அல்லது வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் ஆரம்ப அறிகுறிகளாக காது வலி, லேசான காது கேளாமை மற்றும் சில நேரங்களில் லேசான நீர் வெளியேற்றம் ஆகியவை ஏற்பட தொடங்கும். இந்தப் பிரச்சனை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மிக வேகமாக ஏற்பட தொடங்கும். நீங்கள் தொடர்ச்சியாக காது வலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். இல்லையெனில், நாளடைவில் பிரச்சனை மோசமடையக்கூடும்.

ALSO READ: மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்.. தடுப்பது எப்படி..?

என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும்..?

வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சில நேரங்களில் காதுகளில் காது மெழுகு படிதல், காது அடைப்பு, அழுத்த மாற்றங்கள் மற்றும் காது மந்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். சில நேரங்களில் இவை அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சைனஸ் மற்றும் தொண்டை தொற்றுகளும் அதிகரிக்கும், இது காதுகளைப் பாதிக்க செய்யலாம். குளிர்ந்த காற்று உங்கள் காதுகளை நேரடியாக தொடும் போது எரிச்சலை அதிகரிக்கும். இதனால், தொற்று விரைவாகப் பரவக்கூடும்.

வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களிலிருந்து காதுகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். குளிர்ந்த காற்றை நேரடியாக வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும், பைக் ஓட்டும்போது உங்கள் காதுகளை மூடவும். சளி மற்றும் இருமலை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், இவை பெரும்பாலும் காது தொற்றுகளை அதிகரிக்கின்றன. உங்கள் காதுகளை அதிகமாக குடைவதை தவிர்க்கவும். அதேபோல், குளிர்ந்த காற்றில் இருந்து தப்பிக்க காதுகளில் பஞ்சு வைக்கும்போது அழுத்தி ஆழமாக வைக்க வேண்டாம், ஏனெனில் இது வலியை அதிகரிக்கும்.

ALSO READ: நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ்..? ஏன் உடனடியாக மாற்றவது முக்கியம்..?

காதுகளில் இப்படி கவனம் செலுத்துங்கள்:

  • உங்கள் மருத்துவர் காது சொட்டு மருந்து அல்லது மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், கவனத்துடன் பயன்படுத்துங்கள்.
  • குளிக்கும்போது உங்கள் காதுகளில் தண்ணீர் வருவதைத் தவிர்க்கவும். வலி கடுமையாக இருந்தால், ஹாட் பேக் பயன்படுத்துவது, தண்ணீர் நிறைய குடிப்பது மற்றும் ஓய்வெடுப்பது போன்றவற்றை செய்யலாம்.
  • உங்கள் வீட்டு குழந்தைகள் அடிக்கடி காதை இழுப்பது, காதை குடைவது, அமைதியின்மை அல்லது அடிக்கடி அழுவது போன்றவை காது தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அவற்றை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்காதீர்கள்.

காதுகள் நலமுடன் இருக்க செய்ய வேண்டியவை என்ன..?

  • கூர்மையான பொருட்களை உங்கள் காதுகளில் வைக்காதீர்கள்.
  • நீண்ட நேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.
  • தலைக்கு குளித்தவுடன் காதுகளை சுத்தம் செய்யுங்கள்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினந்தோறும் பழங்களை எடுத்து கொள்ளுங்கள்.

Follow Us