வெறும் ரூ.2,250-க்காக நண்பனை கொலை செய்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!
Friend Kills Friend Over 2250 Rupees in Lucknow | உத்தர பிரதேசத்தில் வெறும் ரூ.2,250 பணத்துக்காக நண்பனை ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
லக்னோ, அக்டோபர் 05 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், லக்னோவில் (Lucknow) வெறும் ரூ.2,250 பணத்துக்காக இளைஞர் ஒருவர் தனது நண்பரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார், கொலை சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த கொடூர கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெறும் ரூ.2,250-க்காக நண்பனை கொலை செய்த நபர்
லக்னோவை சேர்ந்த பிர்ஜுவும், சச்சினும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர். அந்த வகையில், செப்டம்பர் 28, 2026 அன்று சச்சின் பிர்ஜுவிடம் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அப்போது பிர்ஜு தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதன் காரணமாக, சச்சின் தனது பைக்கை அடமானம் வைத்து பணத்தை தயார் செய்துள்ளார்.
இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ஒரு மாதம் முழுவதும் தீவிர டிக்கெட் சோதனை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு
மின்சாரத்தை பாய்ச்சி பணத்தை திருடிய பிர்ஜு
பணத்தை வைத்து மதுபானம் வாங்கி பிர்ஜுவின் அறையில் வைத்து இருவரும் குடித்துள்ளனர். அப்போது அதிக அளவில் குடித்த சச்சின், போதை தலைக்கு ஏறி சுய நினைவை இழந்துள்ளார். அப்போது அவரது சட்டை பையில் ரூ.2,250 இருப்பதை அறிந்து அதனை எப்படியாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து சச்சினின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு, உடலை வேறு ஒருவரின் வீட்டின் முன்பு வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : மனித குளத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழும் காந்தியின் வாழ்க்கை.. பிரதமர் மோடி மரியாதை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிசி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில், பிர்ஜு தான் தனது நண்பர் சச்சினை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.