Chennai Power Cut: சென்னையில் இன்று (05.10.26) எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்?.. முழு விவரங்கள் இதோ!
Chennai Power Shutdown: சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (05-10-2026) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. நேரு நகர், கணேஷ் நகர், பாலாஜி நகர், அகரம் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை, அக்.05: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் பொதுமக்களுக்குச் சீரான மற்றும் பாதுகாப்பான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் அவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பராமரிப்புப் பணிகளின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும், மின் சாதனங்களைச் சீரமைக்கும் நோக்கிலும் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், திங்கள்கிழமை அன்று சென்னையில் உள்ள முக்கிய குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைக்கு உள்ளாகும் பகுதிகள்:
இந்தத் திட்டமிடப்பட்ட மின் பராமரிப்புப் பணிகளின் காரணமாகச் சென்னையின் முக்கியப் பகுதியான தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வானம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி, இபி காலனி, மோகனபுரி மற்றும் நியூ காலனி.
சேத்துப்பட்டு: மெக்னிகோல்ஸ் ரோடு, நௌரோஜி ரோடு, குருசாமி ரோடு, புடவை ரோடு, முத்தையப்பா தெரு, அருணாசலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கந்தன் தெரு, அப்பர் ராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு, யாதவர் தெரு, வி.வல்லார் தெரு, கிழக்கு மடத்தெரு. கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, எஸ்.எஸ்.சாஹிப் தெரு, தெற்கு ஆஜாரா கார்டன், வடக்கு ஆஜாரா கார்டன், மேற்கு அரசமரம் தெரு, சுண்ணாம்பு தெரு, கண்ணையா தெரு, கிழக்கு அரசமரம் தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மாரியல் தெரு, டெலிபோன் சாலை, ஆர்பிஐ சாலை, டெலிபோன் சாலை, ஆர்.பி.ஐ. குவார்ட்டர்ஸ் மற்றும் திரு வீதி அம்மன் தெரு. ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
அதேபோல், செங்குன்றம் குமரன் நகர், ஒரக்காடு சாலை, கோட்டை மேடு, ஜிஎன்டி சாலை, பெரிய காலனி, பன்னீர்வாக்கம், பார்த்தசாரதி நகர், செம்புலிவரம் மற்றும் அழகத்தம்மன் நகர். சிட்லபாக்கம், சர்வமங்களா நகர், திரு-வி-கா நகர், ஹரிதாஸ்புரம் மெயின் ரோடு, அம்மன் கோயில் தெரு, அகத்தியர் தெரு, உ.வி. சுவாமிநாத தெரு, பாம்பன் சுவாமிகள் சாலை, பாபு தெரு, கலைவாணர் தெரு, கல்யாணசுந்தரம் தெரு, சுதா அவென்யூ, சாரதாம்பாள் தெரு, ராமகிருஷ்ணாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சர்மா நகர், மாளவிகா அவென்யூ, நசீப் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், திருமலை நகர், சரஸ்வதி நகர், ஈஸ்வரி நகர் மற்றும் வேளச்சேரி மெயின் ரோடு.
மேலும் முக்கியப் பகுதியான நேரு நகர், கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு, பாலாஜி நகர், கற்பகம் நகர் 1 முதல் 9வது தெருக்கள், காமாட்சி நகர், பத்மாவதி நகர் விரிவாக்கம், சீனிவாச நகர், அக்ரம் மெயின் ரோடு, ஆர்.பி. சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு ஆகிய அத்தியாவசிய இணைப்புச் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும். எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இல்லத்தரசிகள் தங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் சேமிப்பு உள்ளிட்ட பணிகளை காலை 9 மணிக்கு முன்பாகவே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மின்தடை நேரமும் மின் விநியோக சீரமைப்பு தகவலும்:
மின்வாரியத்தின் இந்த அறிவிப்பின்படி, திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல், மரக்கிளைகளை அகற்றுதல், மின் மாற்றிகளைச் சீரமைத்தல் மற்றும் துணை மின் நிலையப் பராமரிப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பணிகள் இந்த நேரத்திற்குள் துரிதமாகச் செய்து முடிக்கப்படவுள்ளன. மேலும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே பராமரிப்புப் பணிகள் நிறைவுபெற்றுவிட்டால், மதியம் 2:00 மணிக்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் வழக்கம்போல் சீரமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றும் மின்சாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.