AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்தபோது திடீரென வந்த பாம்பு.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய சுற்றுலா பயணிகள்!

Kempty Waterfall Viral Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சுற்றுலா பயணிகள் சிலர் நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்தபோது பாம்பு வந்ததால் அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடிய வீடியோ வெளியாகி, இணையத்தில் மிக வேகமகா வைரலாகி வருகிறது.

நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்தபோது திடீரென வந்த பாம்பு.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய சுற்றுலா பயணிகள்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2025 10:37 AM IST

உத்தரகாண்ட், ஜூன் 16 : உத்தரகாண்டில் (Uttarakhand) சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென பாம்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீர்வீழ்ச்சியில் பாம்பு வந்ததும், குளித்துக்கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நீர்வீழ்ச்சியில் பாம்பு வந்தது விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள்

உத்தரகாண்ட் மாநிலம், முசோரி பகுதியில் கெம்ப்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சி என்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஜூன் 14, 2025 அன்று, வழக்கம் போல சுற்றுலா பயணிகள் சிலர் நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென நீர்வீழ்ச்சியில் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை கண்டு குளித்துக்கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சுற்றுலா பயணிகள் சிலர், நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, அங்கு பாம்பு ஒன்று வருகிறது. அதனை கண்டு கடும் அதிர்ச்சி அடையும் சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்குகின்றனர். தண்ணீரில் வேகமாக ஓட முடியாது என்பதால், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுகின்றனர். இதற்கிடையே பாம்பு தண்ணீரில் நீந்திக்கொண்டு சுற்றுலா பயணிகளின் அருகே சென்று விடுகிறது. அதனை கண்டு மேலும் பதற்றம் அடையும் சுற்றுலா பயணிகள் கத்தி கூச்சலிடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மனிதர்களுக்கு இப்போதாவது இயற்கையின் பலம் என்னவென்று தெரியட்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இயற்கையை சீர்குலைக்கும் மனிதர்களுக்கு இயற்கை தான் சரியான தீர்வு என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us