AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா – மொரிஷியஸ் உறவை மேம்படுத்த திட்டம்.. தொலைப்பேசியில் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமிடம் பேசிய பிரதமர் மோடி..

PM Narendra Modi: மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக உறையாற்றினார். அப்போது இரு நாட்களுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவை வலுப்படுத்தும் விதமாக பல் துறை முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – மொரிஷியஸ் உறவை மேம்படுத்த திட்டம்.. தொலைப்பேசியில் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமிடம் பேசிய பிரதமர் மோடி..
பிரதமர் மோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jun 2025 10:42 AM IST

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஜூன் 24 2025 தேதியான நேற்று மொரிஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன்சந்திரா ராம்கூலம் (Prime Minister Navinchandra Ramgoolam) உடன் தொலைபேசியில் உரையாடினார். இரு தலைவர்களும் இந்தியா மொரீஷியஸ் இடையே இருக்கக்கூடிய கூட்டான்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பிராந்தியங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் போது இருநாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கும் மொரிசியஷிற்கும் இடையிலான சிறப்பு மற்றும் தனித்துவமான உறவுகளை அடிக்கோடிட்டு காட்டினார். மேலும் மேம்படுத்தப்பட்ட கூட்டான்மையை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிபாட்டையும் எடுத்துரைத்தனர்.

பல் துறைகள் குறித்த பேச்சுவார்த்தை – பிரதமர் மோடி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 24 2025 ஆம் தேதி, மொரிஷியஸ் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய போது வளர்ச்சி கூட்டமை, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, கடலசார் பாதுகாப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மக்களிடையே இருக்கும் உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நடந்து வரும் ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தனர். மேலும் 11 வது சர்வதேச யோகா தினத்தில் மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் பங்கேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

பிராந்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதம்:


இந்த உரையாடல் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ எனது நண்பர் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேம்படுத்தப்பட்ட கூட்டான்மை மற்றும் பிராந்திய முன்னேற்றங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மகாசாகர் மற்றும் நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையில் மொரிஷியஸ் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மொரிஷியஸின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திரா ராம்கூலமை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us