‘இந்தியாவுக்கு முழு உலகத்தின் ஆதரவு கிடைத்தது’ – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி

PM Modi On Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அப்போது, ஆபேரஷன் சிந்தூர் நடவடிக்கையை எந்த நாடுகளும் தடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். அதோடு, ஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூன்று நாடுகள் மட்டுமே பேசியதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கு முழு உலகத்தின் ஆதரவு கிடைத்தது  - ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated On: 

29 Jul 2025 19:22 PM

டெல்லி, ஜூலை 29 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி  (PM Modi) பேசியுள்ளார். அவர்  பல்வேறு விஷயங்கள் குறித்து கூறினார். அவர் பேசுகையில், “ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் (Pahalgam Attack) நடந்தது கொடூரமான சம்பவம். அப்பாவி மக்களை அவர்களின் மதம் குறித்து கேட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது கொடுமையின் உச்சம். இது இந்தியாவை வன்முறைத் தீயில் தள்ள நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களை பரப்புவதற்கான ஒரு சதி. நாடு ஒற்றுமையுடன் அந்த சதியை முறியடித்ததற்காக இன்று நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன். ராணுவத்திற்குச் செயல்பட சுதந்திரம் வழங்கப்பட்டது. மேலும், எப்போது, எங்கே, எப்படி, எந்த முறையில் என்பதை இராணுவம் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

பாகிஸ்தான் 1000 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை வானத்திலேயே அழித்தது. நமது வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்தது. பயங்கரவாத மூளையாக செயல்பட்டவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் அளவுக்கு அது ஒரு தண்டனையாக இருந்தது. இனி அணு ஆயுத மிரட்டல் வேலை செய்யாது. அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதையும் நாங்கள் நிரூபித்தோம். பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தி, அவர்களின் விமான தளங்கள் மற்றும் சொத்துக்களைத் தாக்கி, இந்தியா தனது தொழில்நுட்ப வல்லமையைக் காட்டியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை தாக்கியது.

Also Read : ‘டிரம்ப் பொய்யர் என நாடாளுமன்றத்தில் கூறுவீர்களா?’ மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

பிரதமர் மோடி பேச்சு


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாடு வெறும் 22 நிமிடங்களில் நிறைவேறியது.   ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூன்று நாடுகள் மட்டுமே பேசின. இந்தியாவுக்கு முழு உலகத்தின் ஆதரவு கிடைத்தது. ஆனால் காங்கிரஸின் ஆதரவு மட்டும் இல்லை.

இந்தியாவின் நடவடிக்கை எந்த நாடுகளும் தடுக்கவில்லை. எந்த நாட்டின் தலைவரும் இந்தியாவை இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்கவில்லை. மே 9 அன்று இரவு, அமெரிக்க துணைத் தலைவர் என்னை 3-4 முறை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் நான் ஆயுதப்படைகளுடனான சந்திப்புகளில் மும்முரமாக இருந்தேன். நான் திரும்ப அழைத்தபோது, பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலைத் திட்டமிடுவதாக அவர் எனக்குத் தெரிவித்தார்.

Also Read : ‘பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா விளக்கம்

அதைத்தான் அவர் நேரடியாக என்னிடம் கூறினார். பாகிஸ்தான் அத்தகைய தாக்குதலை நடத்த திட்டமிட்டால், அது மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதைத்தான் நான் அமெரிக்க துணை ஜனாதிபதியிடம் சொன்னேன். ஆயுதப்படைகளை எதிர்மறையாக அணுகுவது காங்கிரஸின் பழைய பழக்கமாக இருந்து வருகிறது. கார்கில் வெற்றியை காங்கிரஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை” என கூறினார்.