Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

NEET PG Postpone: ஒரே கட்டமாக நடத்த சொன்ன உச்சநீதிமன்றம்.. முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

NBEMS Announcement: நீட் PG 2025 தேர்வு ஜூன் 15, 2025 அன்று நடைபெறவிருந்தது, ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரே கட்டமாக நடத்த வேண்டிய அவசியத்தால் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) ஒத்திவைத்துள்ளது. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், விண்ணப்பதாரர்களின் நுழைவுச்சீட்டுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் NBEMS தெரிவித்துள்ளது. ஒத்திவைப்பு தேர்வாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

NEET PG Postpone: ஒரே கட்டமாக நடத்த சொன்ன உச்சநீதிமன்றம்.. முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்!
முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 02 Jun 2025 20:29 PM

டெல்லி, ஜூன் 2: 2025 ஜூன் 15ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு (NEET-PG 2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (National Board of Examinations in Medical Sciences) அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஒரே கட்டமாக தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, தேசிய தேர்வுகள் வாரியம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைத்துள்ளது. கிடைத்த தகவலின்படி, நீட் முதுகலை தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிக்கப்படும். முன்னதாக, தேர்வாளர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட்டது. இது தேசிய தேர்வு வாரியத்தின் தேர்வு நடத்தும் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

நீட் முதுகலை தேர்வு வருகின்ற 2025 ஜூன் 15ம் தேதி நடைபெறவிருந்தது. தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பு, அதற்கான பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், இந்த தேர்வு 2 கட்டமாக நடைபெற இருந்தது. தற்போது, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வுகள் நடத்த இன்னும் நேரம் இருக்கிறது என்றும், வாரியம் ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, தேசிய தேர்வு வாரியம் முதுகலை நீட் தேர்வை ஒத்திவைத்தது.

NBEMS விளக்கம்:

NBEMS என்று அழைக்கப்படும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம், தேர்வு ஒத்திவைப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “ஒரே கட்டமாக தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கூடுதல் தேர்வு மையங்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல், உள்கட்டமைப்புக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. எனவே, தேர்வு இப்போதைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதன்படி, திருத்தப்பட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

தேர்வுக்கான நுழைவுத் சீட்டு எப்போது வெளியிடப்படும்..?

நீட் முதுகலை தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வுக்கான நுழைவுத் சீட்டு இன்று அதாவது 2025 ஜூன் 2ம் தேதி natboard.edu.in வெளியிடப்பட இருந்தது. தேர்வாளர்கள் இன்று அதாவது 2025 ஜூன் 2ம் தேதி காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை தாமதமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் தேர்வுக்கான நுழைவுத் சீட்டு வாரியத்தால் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் (இ-மெயில்) ஐடிக்கு அனுப்பப்படும். அதை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.