Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TV9 Network – AQI: நீங்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் என்ன? – அறிய உதவும் AQI..!

இந்த AQI.in தளமானது காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட தளங்களில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் இந்த தளம் மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

TV9 Network – AQI: நீங்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் என்ன? – அறிய உதவும் AQI..!
காற்றின் தரம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Jun 2025 12:55 PM

நாம் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ நல்ல உணவு, சுத்தமான காற்று, சரியான பருவநிலை செயல்பாடுகள் உள்ளிட்டவை முக்கியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் காற்றை எடுத்துக் கொண்டால் மாறுபட்ட பருவநிலை, அதிகரிக்கும் வாகனங்கள், தொழிற்சாலைகள் பயன்பாடு, அழிக்கப்படும் காடுகள் உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது உருவாகும் புகை நாம் சுவாசிக்க தகுதியற்ற இடமாக பூமியை மாற்றும் அபாயம் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய நிகழ்வின் காற்றின் தரக்குறியீடு பற்றி நமக்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மாறும் காற்றின் தரம்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் பருவநிலை எதிர்பாராத மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கக்கூடிய கோடை காலத்தில் மழை தொடர்ச்சியாக பெய்தது. ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்கியது. அதேபோல் தான் காற்றின் தரத்தின் ஒவ்வொரு நாளும் மாற்றம் இருக்கும்.

AQI தளம் – டிவி9 நெட்வொர்க் பங்கு

அப்படியான நிலையில் AQI என்பது காற்றின் தரக் குறியீட்டை கண்காணிக்கும் ஒரு தளமாகும். 19 பேர் கொண்ட குழு கொண்ட இந்த தளமானது கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவை கண்டறிவதற்கும், அது குறித்த கருத்துகள் மற்றும் கவலைகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாத கருவிகளாக உள்ளது.  அந்த வகையில் டிவி9 நெட்வொர்க் தங்களுடைய அனைத்து தளங்களிலும் காற்றின் தரக்குறியீடு மற்றும் வானிலை தரவு ஒருங்கிணைப்புக்காக AQI.in தளத்துடன் இணைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக AQI.in தளமானது ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு ஏற்ற வாசகர்களுக்கு பொருத்தமான தரவை வழங்கும்.

தமிழ்நாட்டில் காற்றின் தரம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருப்பூர், புதுச்சேரி, ஈரோடு, கடலூர், கரூர் ஆகிய பிரபலமான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு பற்றிய விவரங்கள் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் டிவி9 தமிழ் தளத்தின் முகப்பு பக்கத்தில் வலது புறத்தில்  மேல் பக்கமாக AQI தளம் இருப்பதை காணலாம். இதனை கிளிக் செய்வதன் மூலம் இன்றைய நாளின் காற்றின் தரக் குறியீடு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் இன்றைய நாளின் மிகவும் காற்று மாசுபாடு உள்ள நகரங்கள் மற்றும் குறைந்த காற்று மாசுபட்ட நகரங்கள் ஆகியவற்றின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாடு விகிதம் எந்த அளவில் உள்ளது என்றும்,  அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல......
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?...
'ஆர்சிபிக்காக என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்' - விராட் கோலி
'ஆர்சிபிக்காக என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்' - விராட் கோலி...
18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி...!
18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி...!...
நீரிழிநோய் மற்றும் உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும் 5 பழக்கங்கள்
நீரிழிநோய் மற்றும் உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும் 5 பழக்கங்கள்...
'தக் லைஃப்' வெளியிட விரும்புகிறோம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
'தக் லைஃப்' வெளியிட விரும்புகிறோம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை...
3 Wicket 3 ரன்கள்! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்!
3 Wicket 3 ரன்கள்! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்!...
அதைப் பார்த்தால் எனக்குப் பயம் - மணிகண்டன்!
அதைப் பார்த்தால் எனக்குப் பயம் - மணிகண்டன்!...
திரிஷா 'தக் லைஃப்' படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் தெரியுமா?
திரிஷா 'தக் லைஃப்' படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் தெரியுமா?...
இரண்டு வானம் ஷூட்டிங் ஓவரா? விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!
இரண்டு வானம் ஷூட்டிங் ஓவரா? விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!...
இந்த 2 சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது - நீதிமன்றம்
இந்த 2 சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது - நீதிமன்றம்...