AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.. தர்பூசணி பழம் காரணமா? பச்சையாக மாறிய உடல் உறுப்புகள்.. ஷாக் தகவல்!!

Mumbai Family Deaths Mystery Deepens: விசாரணையில் மற்றொரு அதிர்ச்சியாக, உயிரிழந்த அப்துல்லாவின் உடலில் 'மார்ஃபின்' (Morphine) என்ற போதைப்பொருளின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்கொலையா, திட்டமிடப்பட்ட கொலையா அல்லது எதிர்பாராத விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.. தர்பூசணி பழம் காரணமா? பச்சையாக மாறிய உடல் உறுப்புகள்.. ஷாக் தகவல்!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 May 2026 13:16 PM IST

மும்பை பெண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (44), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (12) ஆகிய நால்வரும் இரவு உணவு உண்ட பின் திடீரென உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தக் குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணியளவில் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்ட பிறகுதான் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் பழத்தில் இனிப்பிற்காகவோ அல்லது நிறத்திற்காகவோ ஏதேனும் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதையும் படிக்க: எமனாக மாறிய தர்பூசணி பழம்? மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.. பின்னணி என்ன!

உணவுப் பரிசோதனையில் வெளியான உண்மை:

இது குறித்து விசாரணை நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), அவர்கள் வீட்டில் இருந்த தர்பூசணி, சமைக்கப்பட்ட சாதம், மசாலாப் பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில், பழங்களின் நிறத்தையோ, இனிப்பையோ அல்லது அளவையோ கூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகளோ அல்லது ரசாயனக் கலப்படங்களோ அந்த உணவுகளில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விசாரணையில் பெரும் பின்னடைவாகவும், மர்மத்தை அதிகப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

‘பச்சை’ நிறமாக மாறிய உடல் உறுப்புகள்:

அதோடு, உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் ‘பச்சை’ நிறமாக மாறியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இது சாதாரண உணவு நச்சு (Food Poisoning) கிடையாது. ஒரே நேரத்தில் உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளும் இவ்வாறு நிறம் மாற வேண்டுமானால், ஏதோ ஒரு வீரியமிக்க நச்சுப் பொருள் (Toxic Substance) ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் மிக வேகமாகப் பாய்ந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

போதைப்பொருள் தடயம்?

குறிப்பாக, விசாரணையில் மற்றொரு அதிர்ச்சியாக, உயிரிழந்த அப்துல்லாவின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற போதைப்பொருளின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்த வழக்கை முற்றிலும் வேறு ஒரு திசைக்குக் கொண்டு சென்றுள்ளது.இது தற்கொலையா, திட்டமிடப்பட்ட கொலையா அல்லது எதிர்பாராத விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தண்ணீர் மாதிரிகள் குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. மேலும், வீட்டில் இருந்த பேரீச்சம்பழங்கள் போதுமான அளவு இல்லாததால் அவற்றைச் சோதிக்க முடியவில்லை.

இதையும் படிங்க: லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!

அடுத்தகட்ட நடவடிக்கை:

சமைக்கப்பட்ட இறைச்சி மாதிரிகள் புரதப் பரிசோதனைக்காகவும், இதர மாதிரிகள் தடய அறிவியல் சோதனைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. பாக்டீரியா தொற்றுகள் அல்லது கண்டறியப்படாத நச்சுப் பொருட்கள் ஏதேனும் உணவில் இருந்ததா என்பதை அறிய விரிவான தடய அறிவியல் அறிக்கையை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். முழுமையான தடய அறிவியல் அறிக்கை வெளிவந்தால் மட்டுமே, அந்த நான்கு உயிர்களையும் பறித்த அந்த ‘பச்சை நிற’ நச்சு எது என்பது வெளிச்சத்திற்கு வரும். இந்த மர்ம மரணங்கள் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Follow Us