AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவல் நிலையத்திற்குள் நுழைந்து ரோந்து வாகனம் திருடிய நபர்.. கேரளாவில் பரபரப்பு!

Man Stole Police Vehicle In Kerala | கேரளாவில் காவல் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரோந்து வாகனத்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்திற்குள் நுழைந்து ரோந்து வாகனம் திருடிய நபர்.. கேரளாவில் பரபரப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 May 2026 21:43 PM IST

திருவனந்தபுரம், மே 10 : கேரளத்தி (Keralam) காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜீப் வாகனத்தை ஒருவர் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, திருடு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்க பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலையில், இங்கு காவல் நிலையத்தில் இருந்தே ஜீப் திருடப்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காவல் நிலையத்தில் ஜீப் வாகனம் திருடிய நபர்

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் மே 08, 2026 அன்று இரவு ரோந்து வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ரோந்து வாகனத்தை திருடி சென்றுள்ளார். அங்கிருந்து அவர், ரோந்து வாகனத்தை பெட்ரோல் பங்கிற்கு ஓட்டி சென்றுள்ளார்.

இதையும் படிங்க : ராகுல் – விஜய் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியைத் தகர்க்குமா?.. தேசிய அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்!

உணவகத்தில் காசு கொடுக்காமல் சென்ற நபர்

அங்கிருந்து ரோந்து வாகனத்தில் புறப்பட்ட அந்த நபர் உணவகம் ஒன்றில் நின்று உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த உணவக ஊழியர்கள் அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : 75 ஆண்டுகள் நிறைவு: மீண்டும் சோம்நாத் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

விசாரணையில் அந்த நபர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஹம்சத் என்ற 49 வயது நபர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், போலீசாரின் ரோந்து வாகனத்தை திருடி சென்ற அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us