Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளைஞரின் வயிற்றுக்குள் இரும்பு ஸ்பேனர்கள், டூத் பிரஷ்கள்.. ஆடிப்போன மருத்துவர்கள்.. ஷாக் சம்பவம்!

Iron Spanners and Tooth Brushes In Young Men's Stomach | ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதியடைந்து வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இளைஞரின் வயிற்றுக்குள் இரும்பு ஸ்பேனர்கள், டூத் பிரஷ்கள்.. ஆடிப்போன மருத்துவர்கள்.. ஷாக் சம்பவம்!
இளைஞரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Dec 2025 13:33 PM IST

ஜெய்ப்பூர், டிசம்பர் 30 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், பில்வாரா பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து என்ன பிரச்னை என்பதை அறிய முடிவு செய்துள்ளனர். அதன்படி இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்யும்போது அதிர்ச்சிக்குள்ளான மருத்திவர்கள்

வயிற்று வலியால் துடித்த அந்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சைக்கு தயார் செய்த மருத்துவர்கள் இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதையும் படிங்க : திடீரென ஊருக்குள் புகுந்த புலி.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. மபியில் பரபரப்பு சம்பவம்!

2 இரும்பு ஸ்பேனர்கள், 7 டூத் பிரஷ்கள் வயிற்றில் இருந்து அகற்றம்

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் இளைஞரின் வயிற்றில் இருந்து 2 இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் 7 டூத் பிரஷ் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : சோகத்தில் முடிந்த தேன் நிலவு…ஆயிரம் கி.மீ. இடைவெளியில் புதுமண தம்பதி தற்கொலை!

அந்த இளைஞர் மனநீதியாக பாதிகப்பட்டவர் என்பதால் இத்தகைய பொருட்களை அவர் விழுங்கியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், இளைஞரின் வயிற்றில் இருந்து இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்கள் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.