AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக அறிித்துள்ளது.

நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Mar 2026 22:03 PM IST

இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக அறிித்துள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் வட கிழக்கு இந்திய பகுதிகளில் வானிலை மாற்றம் நிலவும் என்றும் தெரிவித்தள்ளது. இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களில் மார்ச் 21, 2026 முதல் மார்ச் 24, 2026 வரை பரவலான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல் குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேற்கு வங்ம் மாநிலத்தில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒடிசா மாநிலத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மாநிலத்தில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் மாநாடு.. இந்தியா வளர்ச்சி திசை குறித்து முக்கிய விவாதம்.. முழு விவரம்..

வடகிழக்கு மாநிலங்களில் மழை

மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மார்ச் 24, 2026 அன்று சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவித்துள்ளது.

அதே போல வட இந்தியாவில் பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியாவை பொறுத்தவரை, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில் மார்ச் 23, 2026 அன்று மிதமான மழையும் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : வழங்காத சிகிச்சைக்கும் கட்டணம்… நோயாளி கேள்வியில் வெளியான உண்மை

ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்கள்

இந்திய வானிலை மையத்தை சேர்ந்த வானிலை ஆய்வாளர் அகில் ஸ்ரீவஸ்தவா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஓடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளார். இந்த பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

Follow Us