AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணம் செய்து வைக்க கோரி டவர் மீது ஏறி போராடிய இளைஞர்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!

Man Threatened Parents by Climbing Cellphone Tower | திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மன உலைச்சலுக்கு ஆளான இளைஞர் 100 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் அவரை மீட்டனர்.

திருமணம் செய்து வைக்க கோரி டவர் மீது ஏறி போராடிய இளைஞர்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jun 2025 07:42 AM IST

பெங்களூரு, ஜூன் 20 : பெங்களூருவில் (Bengaluru) பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் மனமுடைந்த இளைஞர் 100 அடி உயர செல்போன் டவரின் உச்சியின் மீது ஏறி தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலைக்கு சென்றால் தான் திருமணம் செய்து வைப்போம் என பெற்றோர் கூறிய நிலையில், இளைஞர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணம் செய்து வைக்காததால் மன உளைச்சல்

கர்நாடக (Karnataka) மாநிலம் விஜயபுராவை (Vijayapura) சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார். அதற்கு இளைஞரின் பெற்றோர், அவரை வேலைக்கு செல்லும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அருகில் இருந்த 100 அடி உயர செல்போன் டவரின் உச்சியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர்

2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மீட்ட போலீசார்

இந்த நிலையில் சம்பவத்தின் தகவல் அறிந்து வந்து போலீசார், டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தீயணைப்புத் துறை உதவியுடன் போலீசார் அந்த இளைஞரை மீட்டனர். அவர் கீழே வந்ததும், போராட்டம் நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

காரணத்தை கேட்டு ஷாக்கான போலீசார்

அதற்கு பதில் அளித்த அந்த நபர், திருமணம் செய்து வைக்க கோரி கேட்டபோது, வேலைக்கு செல்லும்படி பெற்றோர் கூறியதால் இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் கூறியது போலீசார் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Follow Us