AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் மறுதேர்வு எழுத அச்சம்.. உயிரை மாய்த்துக்கொண்ட 18 வயது மாணவி!

18 Years Old Student Killed Herself In Bhopal | நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த நிலையில், ஜூன் 21 ஆம் தேதி மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போபாலில் நீட் மறு தேர்வுக்கு பயந்து மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நீட் மறுதேர்வு எழுத அச்சம்.. உயிரை மாய்த்துக்கொண்ட 18 வயது மாணவி!
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Jun 2026 23:21 PM IST

போபால், ஜூன் 03 : நீட் (NEET – National Entrance Eligibility Test) தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு முன்னாதகவே வெளியானது தெரிய வந்த நிலையில், நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மறுதேர்வுக்கு பயந்து போபாலை (Bhopal) சேர்ந்த மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வால் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்வுக்கு முன்பு கசிந்த விணாத்தாள் – நீட் மறுத்தேர்வு அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, 2026 மற்றும் 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 03, 2026 அன்று நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இதன் காரணமாக நீட் தேர்வு எழுதிய 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க : 2 வயது தம்பியுடன் பள்ளிக்கு செல்லும் 9 ஆம் வகுப்பு மாணவி.. இணையத்தை கலங்க வைத்த சிறுமியின் கதை!

மறு தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

மே 03, 2026 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜூன் 21, 2026 அன்று மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம், மவுகஞ்ச் மாவட்டம் மஹன்யா கிராமத்தை சேர்ந்த மாணவி அஹன்ஷா என்ற 18 வயது மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மும்பையில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், நீட் வினாத்தாள் கசிந்தது முதலே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு.. 37- ஆக உயர்ந்தது நீதிமன்றத்தின் பலம்.. முழு விவரம் உள்ளே!

இந்த நிலையில், மறு தேர்வு பயத்தில் இருந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அந்த கடிதத்தில், நீட் மறுதேர்வு எழுத அச்சமாக உள்ளது. மறு தேர்வு எழுத தைரியம் இல்லை. அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us