ஏப்ரல் 15, 2026: Central Board of Secondary Education பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 93.70% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 94.99% பேரும், மாணவர்களில் 92.6% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏப்ரல் 20க்குள் முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ முன்னதாகவே அறிவித்திருந்தது.
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், டிஜிலாக்கர், UMANG ஆப், எஸ்எம்எஸ் போன்ற வழிகளின் மூலம் முடிவுகளை பார்க்கலாம். results.cbse.nic.in மற்றும் cbse.gov.in இணையதளங்களில் முடிவுகள் கிடைக்கும். டிஜிலாக்கரிலும் முடிவுகளை பார்க்கலாம்.
மேலும் படிக்க: சென்னையில் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்.. முதல் முறையாக செய்த மாற்றம்..
டிஜிலாக்கர் மூலம் முடிவு அறியும் முறை:
டிஜிட்டல் மார்க்ஷீட்டும் டிஜிலாக்கர் மூலம் கிடைக்கும். CBSE ஆவணங்களுடன் APAAR ஐடி இணைக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்து cbseservices.digilocker.gov.in இணையதளத்தில் “Issued Documents” பகுதியில் முடிவுகளை காணலாம்.
APAAR ஐடி இல்லாத மாணவர்கள்:
- பள்ளி வழங்கிய 6 இலக்க அணுகல் குறியீட்டை (Access Code) உள்ளிட வேண்டும்
- குறியீடு கிடைக்கவில்லை என்றால், பள்ளியை தொடர்புகொள்ள வேண்டும்
- 5 இலக்க குறியீடு இருந்தால், அதன் முன் ‘0’ சேர்க்க வேண்டும்
- பின்னர் விவரங்களை சரிபார்த்து, மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உறுதிப்படுத்த வேண்டும் முடிவுகள் வெளியான பின், மாணவர்கள் தங்களது கணக்கில் மார்க்ஷீட்டை அணுகலாம்.
மேலும் படிக்க: நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
UMANG ஆப் மூலம்:
UMANG ஆப்பிலும் CBSE 10ஆம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.
- web.umang.gov.in இணையதளத்திற்கு செல்லவும்
- “CBSE Class 10 Result 2026” என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
- பின்னர் Class, Roll Number, Application Number போன்ற விவரங்களை உள்ளிடவும்
எஸ்எம்எஸ் மூலம்:
“cbse10 <Roll Number> <School Code> <Center Number>” என்ற வடிவில் 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்பினால், முடிவுகள் வெளியானதும் உங்கள் பெறுபேறு கிடைக்கும்.