Health Tips: சாப்பிட்ட உடனே தூங்குவது எவ்வளவு ஆபத்தானது? இந்த பக்கவிளைவுகள் ஏற்படும்!
Sleeping After Eating: நீங்களும் சாப்பிட்ட உடனேயே தூங்க சென்றால், கவனமாக இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் பல பிரச்சனைகளை அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். அதன்படி, சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வது (Sleeping) உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
மதியம் மற்றும் இரவு உணவு (Dinner) சாப்பிட்ட பிறகு பலரும் குட்டி தூக்கம் முதல் நீண்ட தூக்கத்திற்கு செல்கிறார்கள். பலரும் இரவில் மிகவும் தாமதமாக இரவு உணவை எடுத்து கொள்கிறார்கள். இதன் காரணமாக, சிலர் சாப்பிட்ட உடனேயே தூங்க செல்கிறார்கள். நீங்களும் சாப்பிட்ட உடனேயே தூங்க சென்றால், கவனமாக இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் பல பிரச்சனைகளை அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். அதன்படி, சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வது (Sleeping) உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அந்தவகையில், சாப்பிட்ட உடனே ஏன் தூங்க செல்லக்கூடாதுஎன்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இதயத்திற்கு இந்த 6 உணவு பொருட்கள் ரகசியமாக தீங்கு தரும்.. ஏன் தெரியுமா?
உடல் எடை அதிகரிக்கும்:
சாப்பிட்ட உடனே தூங்க செல்வது உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் கணிசமாக குறைக்கும். மேலும், உங்கள் வளர்சிதை மாற்றம் குறைந்தவுடன், கலோரிகள் சரியாக எரிக்கப்படுவதில்லை, இது நாளடைவில் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.




தூக்கத்தில் எதிர்மறை விளைவு:
சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வது தூக்கத்தை கணிசமாக பாதிக்கும். பலர் பெரும்பாலும் இரவில் அதிக உணவை எடுத்து கொள்வது, வயிற்றில் கனத்தன்மை ஏற்படுகிறது. இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும், இது நெஞ்செரிச்சல் தூக்கத்தையும் கணிசமாக பாதிக்கும். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் சுமார் 2 முதல் 3 மணிநேரம் இடைவெளி இருப்பது முக்கியம்.
செரிமான அமைப்பு:
சாப்பிட்ட உடனே தூங்க செல்வது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும். இதன் காரணமாக, சாப்பிட்ட பிறகு தூங்குவது உணவு சரியாக ஜீரணமாகாமல் தடுக்க உதவும். இது வாயு மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடனே தூங்குவது செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, உணவு சரியாக ஜீரணமாகாமல் தடுக்கிறது. இது எடை அதிகரிப்பு, சோம்பல் உணர்வு மற்றும் தூக்கத்தின் தரம் குறைதல் போன்ற நீண்டகால விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு குறைந்தது 30–45 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உடனடியாக தூங்க செல்லாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
ALSO READ: முதுகெலும்பை வலுப்படுத்த வேண்டுமா? இந்த உணவுகள் பெரிதும் உதவும்!
உணவு சாப்பிட்ட பிறகு என்ன செய்வது..?
சாப்பிட்ட உடனே தூங்க செல்வது என்றுமே நல்ல பழக்கம் கிடையாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது 20 – 30 நிமிடங்கள் ஏதாவது வேலை செய்யலாம். தூங்க செல்வதற்கு முன் 5-10 நிமிடங்கள் நடப்பது நல்லது. நடைபயிற்சி செரிமானத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.