AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: பெண்களுக்கு ஏன் மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது..? எதை கவனிப்பது முக்கியம்?

Womens Health: ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் (UTI) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான முதன்மைக் காரணம் அவர்களின் உடலமைப்பு ஆகும். பெண்களின் சிறுநீர்க்குழாய் ஆண்களின் சிறுநீர்க்குழாயிலிருந்து கணிசமாக வேறுபடுவதால், பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையை எளிதில் சென்றடைகின்றன. இது பொதுவான காரணம்.

Health Tips: பெண்களுக்கு ஏன் மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது..? எதை கவனிப்பது முக்கியம்?
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Aug 2026 20:09 PM IST

சிறுநீர் பாதை தொற்று (UTI) என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் (Womens Health) இருவரையும் பாதிக்கும் ஒரு தொற்று ஆகும். ஆனால், இது ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கின்றன. ஆரம்ப கட்டங்களில், சிறுநீர் பாதை தொற்று ஒரு தீவிரமான அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சனை அல்ல. ஆனால், இதற்கு நீண்ட காலமாக சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டாலோ அல்லது அடிக்கடி மீண்டும் வந்தாலோ, அது கவலைக்குரிய பிரச்சனையாக மாறக்கூடும். சிறுநீர் பாதை தொற்றைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த தொற்றை வராமல் தவிர்க்கலாம். இந்த பிரச்சனை குறித்த விவரங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சர்க்கரை நோயாளிகளே உஷார்! காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

பெண்களுக்கு ஏன் சிறுநீர் பாதை தொற்று (UTI) ஏற்படுகிறது?

ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் (UTI) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான முதன்மைக் காரணம் அவர்களின் உடலமைப்பு ஆகும். பெண்களின் சிறுநீர்க்குழாய் ஆண்களின் சிறுநீர்க்குழாயிலிருந்து கணிசமாக வேறுபடுவதால், பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையை எளிதில் சென்றடைகின்றன. ஹார்மோன் மாற்றங்களும், குறிப்பாக மாதவிடாய் நின்ற காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது, சிறுநீர்ப் பாதையின் இயற்கையான பாதுகாப்பு அரண்களை பலவீனப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில், வளரும் கருப்பையானது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தம் கொடுப்பதால், முழுமையாக சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது பாக்டீரியா வளர்ச்சி அபாயத்தை அதிகரிக்கிறது. டயாஃப்ரம் மற்றும் விந்தணுக்கொல்லிகள் போன்ற சில கருத்தடை முறைகளின் பயன்பாடும் சில பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில சமயங்களில், உடலுறவின் போதும் இந்தத் தொற்று ஏற்படலாம்.

ALSO READ: இளம் வயதில் மூட்டு வலிகள் ஏற்படுவது ஏன்? காரணம் இதுதான்!

அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) உள்ள பெண்களுக்கு, சிறுநீர் கழிக்கும்போது கடுமையான எரிச்சல் அல்லது வலி, அத்துடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. அடிக்கடி, குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுவதுடன், சிறுநீரை அடக்குவதில் சிரமமும் ஏற்படலாம். மேலும், அடிவயிற்றின் இடுப்புப் பகுதியில் வலி மற்றும் கடுமையான தசைப்பிடிப்பையும் ஏற்படுத்தலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் போது, ​​சிறுநீர் கலங்கலாகி, கடுமையான, விரும்பத்தகாத துர்நாற்றத்தை உருவாக்கும். சில சமயங்களில், சிறுநீரில் இரத்தம் தோன்றி, அது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படலாம். இது பலவீனம் மற்றும் சோர்வையும் ஏற்படுத்தக்கூடும். நோய்த்தொற்று தீவிரமடையும்போது, ​​இது சிறுநீர்ப்பையைத் தாண்டி சிறுநீரகங்களுக்கும் பரவி, அதிக காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம், கடுமையான மேல் முதுகு வலி, வாந்தி மற்றும் தொடர்ச்சியான குமட்டல் போன்ற மேலும் தீவிரமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

Follow Us