AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெப்ப அலையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

Extreme Heatwaves: வெப்ப அலையின் போது ஆண்களை விட பெண்களின் உடலில் வியர்வை சுரப்பது குறைவாக இருப்பதால், அவர்களால் உடல் வெப்பத்தை எளிதில் தணிக்க முடிவதில்லை. மாதவிடாய், கர்ப்பகாலம் போன்ற காலகட்டங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும், வீட்டின் காற்றோட்டமில்லாத சூழலில் சமையல் போன்ற வேலைகளைச் செய்வதும் பெண்களுக்குக் கூடுதல் அழுத்தத்தை அளிக்கின்றன.

வெப்ப அலையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
அச்சுறுத்தும் கடும் வெப்ப அலைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Aug 2026 14:55 PM IST

தீவிரமடைந்து வரும் வெப்ப அலை ஆண்களை விட பெண்களின் உடலையும் ஆரோக்கியத்தையும் மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் உடலில் இயல்பாகவே குறைந்த அளவே வியர்வை சுரப்பதால், உடலின் வெப்ப நிலையை விரைவாகக் குறைக்க முடிவதில்லை. மேலும், பெண்களின் உடலில் மாதவிடாய், கர்ப்பகாலம் மற்றும் மாதவிடாய் நிறைவு ஆகியவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடல் வெப்ப நிலையை மேலும் உயர்த்துகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு வெப்ப அலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடும், இதய ரத்த ஓட்ட அமைப்பில் கூடுதல் அழுத்தமும் ஏற்படுகின்றன. மூத்த வயது பெண்களின் உடலில் வெப்பக் கட்டுப்பாட்டுத் திறன் குறைவதால், அவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை (Heatwave) காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளில், ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகள் அனைவரையும் பாதித்தாலும், பெண்களின் உடலியல் அமைப்பு மற்றும் சமூகச் சூழல் ஆகியவை அவர்களுக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

உடலியல் மாற்றங்களும் ஹார்மோன் தாக்கமும்

பெண்களின் உடலில் இயல்பாகவே வியர்வை சுரக்கும் திறன் ஆண்களை விட சற்று குறைவாக உள்ளது. வியர்வை வெளியேறுவதன் மூலமே உடல் தன் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்ளும், ஆனால் பெண்களின் உடலில் இந்த இயங்குமுறை தாமதமாக தொடங்குவதால் வெப்பம் எளிதில் தணிகிறது. மேலும், மாதவிடாய் சுழற்சி, கர்ப்பகாலம் மற்றும் பூப்பெய்தல் அல்லது மாதவிடாய் நிறைவு (Menopause) காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் உடல் வெப்பநிலையை இயல்பாகவே அதிகரிக்கச் செய்கின்றன.

கர்ப்பகால அபாயங்களும் மூத்த பெண்களின் சூழலும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு இதயத் துடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், தீவிர வெப்பத்தின் போது நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மற்றும் உடல் சோர்வு விரைவாக ஏற்படுகின்றன. இது தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை உண்டாக்கலாம். அதேபோல, வயதான பெண்களுக்கு வயது மூப்பின் காரணமாக உடலின் வெப்பக் கட்டுப்பாட்டுத் திறன் மேலும் குறைகிறது, இதனால் வெப்ப அலை நாட்களில் அவர்களுக்குப் பக்கவாதம் மற்றும் பிற தீவிர உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது.

Also Read: 2026-இல் இந்தியாவில் பயணிக்க வேண்டிய சிறந்த சுற்றுலாத் தளங்கள்

சமூகப் பொறுப்புகளும் பராமரிப்பு அழுத்தமும்

உடலியல் காரணங்கள் மட்டுமின்றி, வீட்டின் உட்புற வேலைகள் மற்றும் குடும்பப் பராமரிப்பு பொறுப்புகள் பெரும்பாலான பெண்களின் மீதே சுமத்தப்படுகின்றன. சரியான காற்றோட்டம் இல்லாத வீடுகளுக்குள் நீண்ட நேரம் சமையல் போன்ற பணிகளில் ஈடுபடுவது அவர்களைக் கடுமையான வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இத்தகைய சமூக மற்றும் நிதிப் பின்புலங்கள் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களையோ அல்லது குளிர்ச்சியூட்டும் வசதிகளையோ பெறுவதில் தடைகளை உருவாக்குகின்றன.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us