AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முழங்கால்களில் வலி இருக்கிறதா? இந்த நோய்களில் அறிகுறியாக இருக்கலாம்!

Know the Symptoms: முழங்கால்கள் மற்றும் கால்களில் வலி என்பது பொதுவான பிரச்னையாகும். ஆனால் சில நேரங்களில் அது தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். வலி மீண்டும் மீண்டும் ஏற்பட்டு காலப்போக்கில் அதிகரித்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது. வலிக்கான காரணங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முழங்கால்களில் வலி இருக்கிறதா? இந்த நோய்களில் அறிகுறியாக இருக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Jun 2025 21:53 PM IST

இப்போதெல்லாம் எல்லா வயதினரும் முழங்கால் மற்றும் கால் வலி பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். முன்பு இந்தப் பிரச்னை வயதானவர்களுக்கு மட்டுமே காணப்பட்டது, ஆனால் இப்போது இளைஞர்களிடமும் இந்த பிரச்னை அதிகம் காணப்படுகிறது. சில நேரங்களில் வலி குறைவாக இருக்கலாம். ஆனால் அது ஒரு பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதன் காரணமாக வலியை புறக்கணிப்பது பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும்.   முழங்கால்கள் மற்றும் கால்களில் வலி எந்த கடுமையான மற்றும் பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

சர்வோதயா மருத்துவமனையின் எலும்பியல் துறையின் டாக்டர் அஞ்சல் உப்பல், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் தொடர்ந்து வலி ஏற்படுவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். குறிப்பாக முழங்கால்கள் மற்றும் கால்களில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னையாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இது ஒரு பெரிய நோயின்

யூரிக் அமிலம்

உங்கள் கால் விரல்கள் அல்லது முழங்கால்களில் திடீரென கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டால், அது அதிகரித்த யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இதன் காரணாக கடும் வலி மற்றும் வீக்கம் ஏற்படுத்தும்.

சியாட்டிகா

வலி இடுப்பிலிருந்து தொடங்கி தொடை, முழங்கால் மற்றும் கால் வரை சென்றால், அது சியாட்டிக் நரம்பில் அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பாதிப்பு ஏற்படும்போது  உட்காரும்போது, ​​குனியும்போது அல்லது நிற்கும்போதும் வலி அதிகரிக்கக்கூடும்.

நரம்புகளின் பலவீனம் அல்லது இரத்த ஓட்டத்தில் தடை

சில நேரங்களில் கால்களில் வலி ஏற்படுவதற்கு நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் அல்லது இரத்த ஓட்டம் இல்லாதது கூட காரணமாகும். இந்தப் பிரச்னை குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவானது, இதில் பாதங்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது எரிச்சல் போன்றவை ஏற்படும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு

உடலில் வைட்டமின் டி அல்லது கால்சியத்தின் அளவு குறைந்தால், எலும்புகள் பலவீனமடைந்து மூட்டு வலி தொடங்கும். நீண்ட நேரம் சூரிய ஒளி படாமல் இருப்பதும், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

வலி தொடர்ந்து இருந்தால், வீக்கம் ஏற்பட்டால், நடப்பதில் சிரமம் ஏற்பட்டால், இரவில் தூக்கத்தைத் தொந்தரவு செய்தால், அல்லது வலியுடன் காய்ச்சல், எடை இழப்பு அல்லது சோர்வு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும். வீட்டு வைத்தியம், லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை உடனடி நிவாரணம் அளிக்கும்.  பால், தயிர், சீஸ், பாதாம் போன்ற வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். வலி அதிகமாக இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகலாம்.

Follow Us