Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த தவறுகளா? உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்..!

High Blood Pressure: நீங்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக 5 முதல் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் அதிகம். தூக்கமின்மை உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது.

Health Tips: உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த தவறுகளா? உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்..!
இரத்த அழுத்தம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jan 2026 15:36 PM IST

உயர் இரத்த அழுத்தம் (Blood Pressure) என்பது அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படும் ஒரு நோயாகும். எந்த அறிகுறிகளும் இல்லாமல், உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக உடலை பல கடுமையான நோய்களை நோக்கி தள்ளும். இது பெரும்பாலும் இதயத்தில்தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது நாளடைவில் சிறுநீரகம் (Kidney) மற்றும் நரம்பு பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இந்தியாவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நோயாளிகள் கண்டறியப்பட்ட பின்னரே இந்த நிலையை பற்றி அறிவோம். அந்தவகையில், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் இங்கே..

காலை உணவை தவிர்த்தல்:

அடிக்கரி காலை உணவை தவிர்ப்பது இரத்த அழுத்தத்தை ஏற்ற இறக்கங்களுக்கு இட்டு சென்று உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

ALSO READ: நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது எப்படி? மருத்துவர் அருண் குமார் டிப்ஸ்!

வலி நிவாரணிகள்:

மக்கள் பெரும்பாலும் சிறிய அசௌகரியத்திற்கு கூட வலி நிவாரணிகளை குடிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்கிறார்கள். ஆனால், மருந்துகளை உட்கொள்ளும் இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும். சிறிய வலிகளுக்கு இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை மீண்டும் மீண்டும் உட்கொள்வது சிறுநீரகங்களை பாதிக்கிறது. இது உடலில் சோடியம் மற்றும் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

குறைவாக தண்ணீர்:

தண்ணீர் பற்றாக்குறை இரத்தத்தை தடிமனாக்குகிறது. இதயம் பம்ப் செய்ய கடினமாக உழைக்க வைக்கிறது. இது இரத்த அழுத்தத்தில் படிப்படியாக அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

தூக்க சமநிலையின்மை:

நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக 5 முதல் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் அதிகம். தூக்கமின்மை உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இரவில் இயற்கையாகவே குறைய வேண்டிய இரத்த அழுத்தம் குறையாது, மேலும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது, இது இதயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்:

எனர்ஜி பார்கள், உடனடி ஓட்ஸ் ஆரோக்கியமானதாக தோன்றினாலும், அவற்றில் மறைந்திருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு படிப்படியாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

ALSO READ: உங்கள் தோல்களில் இதுமாதிரியான மாற்றங்களா..? இவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்!

காஃபின் உட்கொள்ளல்:

நீங்கள் அடிக்கடி டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், கவனமாக இருங்கள். காஃபின் கலந்த பானங்களை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கும். மேலும், மாலை அல்லது இரவில் நீங்கள் காபி குடித்தால், அது உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்கிறது. இது மீண்டும் மன அழுத்தத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். காஃபின் சார்ந்திருத்தல் உயர் இரத்த அழுத்த அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.