Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sleeping Tips: தூக்கம் வராமல் தவிப்பா..? இந்த வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தால் போதும்!

Improve Sleep Quality at Night: சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். தூக்கம் ஓய்வெடுப்பதற்கு மட்டுமல்ல, குணப்படுத்துவதற்கும் அவசியம். மன சமநிலை, ஹார்மோன் மறுசீரமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு போதுமான தூக்கம் மிக முக்கியமானது.

Sleeping Tips: தூக்கம் வராமல் தவிப்பா..? இந்த வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தால் போதும்!
தூக்கம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jan 2026 14:58 PM IST

இன்றைய நவீன வாழ்க்கையில் பலரும் தூக்கம் (Sleeping) தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. பணி சுமை காரணமாக மக்கள் இரவு வெகுநேரம் வரை வேலை செய்வதுடன், அதிக அளவில் துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இது உடல்நலக் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. மேலும் தூக்கத்தையும் பாதிக்கிறது. பலர் இரவில் மொபைல் போன் (Mobile Phone) உள்ளிட்ட பயன்பாடு காரணமாக தாமதமாகப் படுத்து தூங்குகிறார்கள். ஆனால் அவர்களால் தூங்க முடியாது. சில நேரங்களில், மன அமைதியின்மையும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். தூக்கம் ஓய்வெடுப்பதற்கு மட்டுமல்ல, குணப்படுத்துவதற்கும் அவசியம். மன சமநிலை, ஹார்மோன் மறுசீரமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு போதுமான தூக்கம் மிக முக்கியமானது. ஒவ்வொரு இரவும் நீங்கள் அமைதியற்றவராக உணர்ந்தால், படுக்கைக்கு முன் சில எளிய பழக்கவழக்கங்கள் உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்.

ALSO READ: மாறிவரும் வானிலையால் தொண்டை வலியா? நிவாரணம் தரும் 6 வீட்டு பொருட்கள்!

இரவில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது எப்படி..?

மொபைல் போன் பயன்பாடு:

மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து வரும் ப்ளே ரே மூளையின் மெலடோனின் உற்பத்தியைக் குறைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. இதனால்தான் தூங்க செல்வதற்கு முன் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே இருப்பது உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்து, தூக்கத்தைத் தாமதப்படுத்துகிறது. எனவே, தூங்க செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே உங்கள் மொபைல் போன் அல்லது வேறு எந்த ஸ்க்ரீனை பார்ப்பதை நிறுத்துங்கள். இந்த நேரத்தின்போது பிடித்தவர்களிடம் பேசுதல், புத்தகம் படித்தல் அல்லது இனிமையான இசையைக் கேட்பது உங்களுக்கு வேகமாக தூங்க உதவும்.

சூடான குளியல்:

தூங்க செல்வதற்கு முன் சூடான நீர் பயன்படுத்துவது தசைகளை தளர்த்தும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மனதை அமைதிப்படுத்துகிறது. இது உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தை கொடுக்கும். இரவில் சூடான குளியல் சாத்தியமில்லை என்றால், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது உடல் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. இது விரைவாக தூக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது.

ALSO READ: கீழே உட்கார்ந்தால் கால்கள் மரத்துப்போகிறதா? காரணத்தை சொல்லும் மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்

மன அமைதி:

தூங்க செல்வதற்கு முன், ஐந்து நிமிடங்கள் நாட்குறிப்பில் அன்றைய நாள் முழுவதும் நடந்ததை நினைவு கூர்ந்து எழுதலாம். இது உங்கள் மனதை இலகுவாக்க உதவும். மேலும், 4 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து, 7 வினாடிகள் மூச்சை நிறுத்தி, 8 வினாடிகள் மூச்சை விடுவிப்பது உங்கள் மனதையும் இதயத்தையும் அமைதிப்படுத்துகிறது. இது விரைவாக தூங்க உதவுகிறது.

மஞ்சள் பால்:

மஞ்சள் பால் சிறந்த தூக்கத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது தசைகள் மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது. மஞ்சள் பால் சோர்வைக் குறைத்து மெலடோனின் அதிகரிக்க உதவுகிறது. படுக்கைக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இந்த பானத்தைக் குடிப்பது விரைவான மற்றும் ஆழமான தூக்கத்தைத் தூண்ட உதவும். இரவில் காஃபின், டீ அல்லது காபியைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை மூளையைத் தூண்டி தூக்கத்தைக் கெடுக்கும்.