Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது குழந்தையை அழகாக்குமா? உண்மை என்ன..?

Pregnancy Tips: இளநீர் தண்ணீர் குடிப்பதால் குழந்தை அழகாக இருக்கும் என்று கூறும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இளநீர் குடிப்பதால் குழந்தை அழகாக இருக்கும் என்று இந்த வீடியோக்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றன.

Health Tips: கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது குழந்தையை அழகாக்குமா? உண்மை என்ன..?
குழந்தையின் அழகுImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Nov 2025 20:41 PM IST

கர்ப்பம் (Pregnancy) என்பது எந்தவொரு பெண்ணுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக கருதப்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாய் தனது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். அதன்படி, ஆரோக்கியமான உணவுகளை (Healthy Food)  எடுத்துகொள்ள வேண்டும். இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை படித்து கர்ப்பிணி பெண்கள் சிலவற்றை நம்பி அதை முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்று கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிப்பது குழந்தையை அழகாக்கும். இந்த செய்தி உண்மையா இல்லையா என்று தெரியாமல், பல பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகளவில் இளநீரை குடிக்க தொடங்குகிறார்கள். அந்தவகையில், இளநீர் உண்மையில் குழந்தையின் தோலின் நிறத்தை அழகாக்குமா இல்லையா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைக்கிறீர்களா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ சொல்லும் டிப்ஸ்!

இளநீர் குடிப்பதால் குழந்தை அழகாகுமா?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு குழந்தையின் தோலின் நிறம் முற்றிலும் பெற்றோரின் மரபணு பண்புகளைப் பொறுத்தது. உடலில் உள்ள மெலனின் அளவு குழந்தையின் தோல் வெளிர் நிறமாக இருக்குமா அல்லது கருமையாக இருக்குமா என்பதை தீர்மானிக்கிறது. எனவே, உடலில் மெலனின் அதிகமாக இருந்தால், குழந்தையின் சருமம் கருமையாக இருக்கும். அதே நேரத்தில், மெலனின் குறைவாக இருந்தால், குழந்தையின் சருமம் வெண்மையாக இருக்கும். எனவே, நீங்கள் கர்ப்ப காலத்தில் இளநீர் குடித்தாலும், தேங்காய் சாப்பிட்டாலும் அல்லது குங்குமப்பூ பால் உட்கொண்டாலும், அது குழந்தையின் நிறத்தை மாற்றாது. அறிவியல் பூர்வமாக, இவற்றை சாப்பிடுவது குழந்தையின் நிறத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது.

சமூக வலைதளங்களில் பரவும் செய்தி என்ன..?

இளநீர் தண்ணீர் குடிப்பதால் குழந்தை அழகாக இருக்கும் என்று கூறும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இளநீர் குடிப்பதால் குழந்தை அழகாக இருக்கும் என்று இந்த வீடியோக்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றன. இருப்பினும், பல மருத்துவர்கள் இந்தக் கூற்றுகளை முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர். இளநீர் குழந்தையின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். எந்தவொரு ஊட்டச்சத்தும் குழந்தையின் தோல் நிறத்தை மாற்றும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? மருத்துவர் ஸ்வாதி நேதாஜி டிப்ஸ்!

கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது சரியா?

இளநீர் குடிப்பதால் குழந்தையின் நிறம் மாறாது என்றாலும், இளநீர் நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இளநீரில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், ஆற்றலை வழங்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இளநீர் வெப்பம், வாந்தி மற்றும் நீரிழப்புக்கும் மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுகிய பின்னரே இளநீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை மேலும் மோசமாக்கும்.