Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்களே உஷார்.. இந்த நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம்!

Monsoon Tips For Pregnant Women: மழைக்காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஏனெனில், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மழைக்காலத்தில் நோய்கள் உடனடியாக தாக்கும். மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எந்த நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.

Health Tips: மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்களே உஷார்.. இந்த நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம்!
மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Oct 2025 15:03 PM IST

வெயில் காலத்திற்கு பிறகு வரும் மழைக்காலம் அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், இது சில நோய்களையும் கையோடு கொண்டு வரும். அதாவது மழைக்காலத்தின்போது (Monsoon) நோய்கள் மற்றும் பல தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, மற்றவர்களை போலவே மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு (Pregnant) மிகவும் கடினமாக கருதப்படுகிறது. இது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிக்கும். ஈரப்பதம் பாக்டீர்யா மற்றும் கொசுக்களை இனப்பெருக்கம் செய்வதால் மழைக்காலங்களில் பாக்டீரியா நோய்கள் மற்றும் தொற்றுகள் அதிகரிப்பது பொதுவானது. எனவே, கர்ப்பிணி பெண்கள் தங்களை தாங்களே சிறப்பாக கவனித்து கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஏனெனில், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மழைக்காலத்தில் நோய்கள் உடனடியாக தாக்கும். மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எந்த நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.

ALSO READ: சில பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது ஏன்..? மருத்துவ காரணங்கள்..!

டெங்கு காய்ச்சல்:

டெங்கு காய்ச்சல் குறைந்த பிளேட்லேட் எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் முன்கூட்டியே பிரசவம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் பெண்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

லெப்டோஸ்பிரோசிஸ்:

லெப்டோஸ்பிரோசிஸ் என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளால் பரவும் லெப்டோஸ்பிரோசிஸ், மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு அல்லது உறுப்பு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ஹெபடைடிஸ் ஏ, ஈ:

ஹெபடைடிஸ் ஏ, ஈ சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் செழித்து வளர்கின்றன. இவை பொதுவாக வடிகட்டப்படாத நீர் மூலம் பரவுகின்றன. ஹெபடைடிஸ் ஈ கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கர்ப்ப காலத்தில், மேலும் கருவின் இறப்பு மற்றும் கலீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

டைபாய்டு காய்ச்சல்:

ம்ழைக்காலங்களில் சுகாதார பிரச்சனைகள் காரணமாக டைபாய்டு பரவுகிறது. இது அதிக காய்ச்சல் மற்றும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கர்ப்பிணி பெண்கள் இந்த பருவத்தில் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மலேரியா:

கர்ப்ப காலத்தில் மலேரியா சில சமயங்களில் பெண்களுக்கு கடுமையான இரத்த சோகை மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பிறத்தல் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பூஞ்சை தொற்று:

பூஞ்சை தொற்றுகள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, ஈரப்பதம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக தோல் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ALSO READ: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

உங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது எப்படி..?

  • கர்ப்ப காலத்தில் காய்ச்சல், சளி மற்றும் பிற சுவாச தொற்றுகள் போன்ற நோய்களை தவிர்க்க சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம்.
  • ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
  • கொசுக்களை தவிர்க்க, வாளிகள் அல்லது பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து வைக்காதீர்கள். அவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
  • கர்ப்ப காலத்தில் அதிகபடியான ஓய்வு எடுப்பதும் முக்கியமானது.
  • வெயில், மழை என எந்த பருவ காலமாக இருந்தாலும் அதிகளவில் தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்.