Health Tips: இரவில் திடீரென தசை விறைப்பா..? இது மெக்னீசியத்தின் குறைபாட்டின் அறிகுறிகள்..!
Magnesium Deficiency: உடலில் உள்ள மெக்னீசியம் அளவுகள் கணிசமாகக் குறையும் வரை மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் உடலில் அவ்வளவாக தெரியாது. எனவே, நமது அன்றாட வழக்கத்தில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தாதுப் பற்றாக்குறை உடலில் பல்வேறு அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.
மெக்னீசியம் (Magnesium) ஒரு கனிமமாகும். இதன் குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் (Diabetes) அல்லது பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்களுக்கு மெக்னீசியம் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம். இதுமட்டுமின்றி, அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் மெக்னீசியம் குறைபாடு ஏற்படலாம். உடலில் உள்ள மெக்னீசியம் அளவுகள் கணிசமாகக் குறையும் வரை மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் உடலில் அவ்வளவாக தெரியாது. எனவே, நமது அன்றாட வழக்கத்தில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தாதுப் பற்றாக்குறை உடலில் பல்வேறு அறிகுறிகள் ஏற்பட தொடங்கும். அதன்படி, இந்தக் கட்டுரையில், மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகளையும், அதை சரிசெய்யும் உணவு முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:
மெக்னீசியம் குறைபாடு அல்லது ஹைப்போமக்னீமியாவின் அறிகுறிகளில் ஒன்று. இரவு நேரங்களில் கால்களில் தசை இழுப்பு , தசை பலவீனம் காரணமாக நடுக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம். இந்த தாதுப் பற்றாக்குறை சில சமயங்களில் உங்களுக்கு மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதாவது, இது மன உணர்வின்மை, மனச்சோர்வு மற்றும் மூட் ஸ்விங் போன்றவை ஏற்படும். மெக்னீசியம் குறைபாடு எலும்பு பலவீனத்தையும் ஏற்படுத்தும். ஏனெனில், கால்சியத்தைத் தவிர , மெக்னீசியமும் உங்கள் எலும்புகளுக்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இப்போது அதன்படி, மெக்னீசியம் நிறைந்த உணவுகளை பற்றியும் அறிவது முக்கியம்.
ALSO READ: ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வெந்தய நீர்.. யார் யார் தவிர்ப்பது நல்லது..?




வயதுக்கு ஏற்ப மெக்னீசியத்தின் அளவு:
பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு தினமும் 30 மில்லிகிராம் மெக்னீசியமும், 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 80 மில்லிகிராம், 7 முதல் 12 மாதங்கள் வரையிலான சிறுவர்களுக்கு 75 மில்லிகிராம், 4 முதல் 8 வயது வரையிலான சிறுவர்களுக்கு 130 மில்லிகிராம், 9 முதல் 13 வயது வரையிலான சிறுவர்களுக்கு 130 மில்லிகிராமும் தேவைப்படுகிறது .மேலும், வயதுக்கு ஏற்ப, மெக்னீசியத்தின் தேவைகள் பாலினம் மற்றும் மருத்துவ நிலைமைகளின் அடிப்படையில் மாறுபடலாம் .
பூசணி விதைகள்:
மெக்னீசியம் குறைபாட்டை நிவர்த்தி செய்ய பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். 1 அவுன்ஸ் வறுத்த பூசணிக்காயில் 156 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 37 சதவீதம் ஆகும் .
சியா விதைகள்:
பூசணி விதைகளைப் போலவே , சியா விதைகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது . 1 அவுன்ஸ் சியா விதைகளில் 111 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 26 சதவீதம் ஆகும் .
பாதாம்:
மெக்னீசியம் குறைபாட்டை போக்க, உங்கள் உணவில் பாதாமை சேர்த்து கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் பாதாமில் 80 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 19 சதவீதம் ஆகும். முந்திரிப்பருப்பிலும் மெக்னீசியம் காணப்படுகிறது.
ALSO READ: ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்..? யார் யார் சாப்பிடக்கூடாது..?
மெக்னீசியத்தின் மூலங்கள்..
பசலைக் கீரை மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இது தவிர வேர்க்கடலை, சோயா பால், வாழைப்பழங்கள், பழுப்பு அரிசி, கருப்பு பீன்ஸ், தயிர், ஓட்ஸ், சிறுநீரக பீன்ஸ், ப்ரோக்கோலி, ஆப்பிள் மற்றும் கேரட் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலுக்கு தேவையான மெக்னீசியத்தை தருகிறது. இது தவிர சிக்கன், சால்மன் போன்ற அசைவ உணவுகளிலும் மெக்னீசியம் உள்ளது .